புதன், 13 அக்டோபர், 2010

இலங்கைக்கு முதல் தங்கப் பதக்கம்

தங்கம் வென்றுள்ள மஞ்சு வன்னியராச்சி
குத்துச் சண்டைப் போட்டியின் பாண்டம் வெயிட் பிரிவில் மஞ்சு வன்னியாராச்சி வேல்ஸ்லின் ஷான் மெக்கோல்ட்ரிக்கை வீழ்த்தி தங்கப் பதக்கம் வென்றார். காமன்வெல்த் போட்டிகளில்   72 ஆண்டுகளுக்கு பிறகு முதல் முறையாக குத்துச் சண்டைப் போட்டியில் இலங்கை தங்கப் பதக்கம் வென்றுள்ளது.
30 வயதான மஞ்சு வன்னியராச்சியும் அவரை எதிர்த்த வேல்ஸ் வீரரும் 7-7 என்கிற கணக்கில் இருந்தாலும், இறுதியில் 16-14 என்கிற புள்ளிகள் கணக்கில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார்.
இந்த வெற்றி இலங்கையில் குத்துச் சண்டை விளையாட்டுக்கு ஒரு ஏற்றத்தைக் கொடுக்கும் என அவரது பயிற்சியாளர் டியான் கோம்ஸ் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.   இந்தப் போட்டியின் அரையிறுதியில் மஞ்சு வன்னியராச்சி ஒலிம்பிக் போட்டிகளில்    வெண்கலப் பதக்கம் வென்றவரும் கடந்த போட்டியில் தங்கப் பதக்கம் வென்றவருமான லூயிஸ் ஜூலியை வென்றிருந்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக