வியாழன், 14 அக்டோபர், 2010

பாலியல் புகார்: பாதிரியார் ராஜரத்தினம் முன்ஜாமீன் கோரி ஐகோர்ட்டில் மனு

கன்னியாஸ்திரியை கற்பழித்ததாக கூறப்பட்ட புகாரை தொடர்ந்து திருச்சி பாதிரியார் முன்ஜாமீன் கேட்டு மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார். .

அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே உள்ள தஞ்சாவூரான் சாவடியைச் சேர்ந்தவர் மலையப்பன். இவரது மகள் ப்ளாரன்ஸ்மேரி (வயது 31), கன்னியாஸ்திரி. திருச்சியில் உள்ள ஒரு பிரபல கல்லூரி முதல்வர் பாதிரியார் ராஜரத்தினம், தன்னை மிரட்டி கற்பழித்து விட்டதாக ப்ளாரன்ஸ்மேரி கோட்டை அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். அந்த புகாரின் அடிப்படையில் போலீசார், பாதியார் ராஜரத்தினம் மீது வழக்குப்பதிவு செய்து அவரை தேடி வருகின்றனர்.

இந்நிலையில் ராஜரத்தினம், போலீசார் தன்னை கைது செய்யாமல் இருக்க முன்ஜாமீன் கேட்டு மதுரை ஐகோர்ட்டு கிளையில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு நீதிபதி வி.பெரியகருப்பையா முன்னிலையில் 13.10.2010 அன்று விசாரணைக்கு வந்தது.

அரசு தரப்பில் ஆஜரான வக்கீல் ஆர்.எம்.அன்புநிதி, கற்பழிப்பு புகார் கூறி உள்ள ப்ளாரன்ஸ்மேரியை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தி உள்ளோம். விசாரணை ஆரம்ப கட்டத்தில் உள்ளது. தற்போதுள்ள சூழ்நிலையில் மனுதாரருக்கு முன்ஜாமீன் கொடுத்தால் சாட்சிகளை கலைப்பதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளது. எனவே முன்ஜாமீன் வழங்கக்கூடாது என்றார்.

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி வி.பெரியகருப்பையா, பிளாரன்ஸ்மேரி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ள கருத்துக்களை எழுத்துபூர்வமாக தாக்கல் செய்யும்படி உத்தரவிட்டார். பின்னர் விசாரணையை வருகிற 18ந் தேதிக்கு நீதிபதி தள்ளி வைத்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக