புதன், 6 அக்டோபர், 2010

வேலக்காரரை அடித்து கொன்ற சவூதி அரேபிய இளவரசர்



சவூதி அரேபிய இளவரசரும், அரசர் அப்துல்லாவின் பேரனுமான சவுத் அப்துல் அஸீஸ் பின் நாசிர் அல் சவுத் (34) தனது வேலைக்காரரான பந்தர் அப்துல்அஸீஸ் (32) என்பவரை அடித்து கொன்றதாக சிசிடிவி புகைப்படங்களுடன் தற்போது தகவல் வெளியாகி உள்ளது.
கடந்த டிசம்பர் மாதம் இருவரும் லண்டன் சென்றுள்ளனர். அங்குள்ள ஓட்டலில் லிப்டில் வைத்து ஜனவரி 22-ம் தேதி பந்தரை தாக்கிய படங்களை சிசிடிவி வெளியிட்டுள்ளது. 
இந்த தாக்குதலுக்கு பந்தர் எதிர் தாக்குதலோ, தற்காத்து கொள்ளவோ இல்லை. பின்னர் அவருக்கு காது பெரியதாக வீங்கியதால் சர்ஜரி செய்யப்பட்டது.
 கடந்த பிப்ரவரி 14-ம் தேதி காதலர்கள் தினதை முன்னிட்டு இருவரும் ஒன்றாக உணவருந்தி உள்ளனர். மறுநாள் இளவரசர் அல் சவுத், பந்தர் இறந்து கிடப்பதாக சவூதி அரேபிய தூதரகத்தை தொடர்பு கொண்டு அதிகாரியை வரவழைத்துள்ளார்.
போலீஸ் அதிகாரிகள் விசாரணையில், அவர் ஓரினச்சேர்க்கையாளர் என்பதை இருவரின் உள்ளாடைகளை வைத்து கண்டறிந்துள்ளனர்.

மேலும் இளவரசரின் லேப்டாப்பில் அவர் ஆண் காதலர்களுடன் மசாஜ் செய்து கொள்வது போன்ற புகைப்படங்களும் கிடைத்துள்ளன

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக