இன்று காலை திருமலை மாவட்டம் மூதூர் பகுதியில் உள்ள தக்வார் நகரில் இடம்பெற்ற வெடிவிபத்தில் படுகாயமடைந்த ஐந்து சிறுவர்களில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மூதூர் கடற்கரை பகுதியில் கண்டெடுக்கப்பட்ட மோட்டார் எறிகணையின் பியூஸ் உடன் விளையாட முற்பட்டபோதே இந்த வெடிவிபத்து ஏற்பட்டுள்ளது. இதன்போது மூன்று வயது முதல் 9 வயது வரையிலுமான ஐந்து சிறுவர்கள் படுகாயமடைந்திருந்தனர்.
முதலில் மூதூர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சிறுவர்கள் பின்னர் திருமலை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டிருந்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக