புதன், 13 அக்டோபர், 2010

கோத்தாபய மீதான தாக்குதல் சந்தேகநபருக்குச் சிறை


பாதுகாப்பு விவகாரச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ்வை இலக்கு வைத்து தற்கொலைக் குண்டுத் தாக்குதலை நடத்த முயற்சித்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். கொட்டாஞ்சேனை பொலிஸாரினால் இந்த சந்தேகநபர் கொழும்பு பிரதான நீதவான் ரஸ்மி சிங்கப்புலி முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட போதே நீதவான் சந்தேகநபரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பித்துள்ளார். இதன்படி தடுத்து வைக்கப்பட்டிருந்த சந்தேகநபர் எதிர்வரும் 26ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். தற்கொலைக் குண்டுத் தாக்குதல் நடத்தியவருக்கு இந்த சந்தேகநபர் உதவிகளை வழங்கியதாக பொலிஸார் நீதிமன்றில் கூறியுள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக