திங்கள், 4 அக்டோபர், 2010
திடீர் சந்திப்பு... நயன்தாராவுக்கு ரஜினி அட்வைஸ்?
சென்னையில் படப்பிடிப்புத் தளத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினியை திடீரென்று சந்தித்தார் நயன்தாரா. இருவரும் சிறிது நேரம் தனியாகப் பேசிக் கொண்டிருந்தனர்.
பிரபு தேவா - நயன்தாரா திருமணம் நடக்கவிருப்பதாக பேச்சு கிளம்பியுள்ள நிலையில், இந்த சந்திப்பு முக்கியத்துவம் பெற்றுள்ளது.
பிரபு தேவா ரம்லத்தை காதலித்து மணந்த போது, அவருக்கு வீட்டில் பெரும் எதிர்ப்பு கிளம்பியது. அப்போது இருவருக்கும் அடைக்கலம் கொடுத்து ஆதரித்தவர்கள் ரஜினியும் அவர் மனைவி லதாவும்தான்.
இப்போது அந்த ரம்லத்தின் வாழ்க்கை நயன்தாராவால் கேள்விக்குறியாகியுள்ளது. ரம்லத்தை விவாகரத்து செய்யும் முயற்சியில் தீவிரமாக உள்ளார் பிரபு தேவா.
இதை அறிந்த ரம்லத் தனக்கு வேண்டிய பெரியவர்கள் மூலம் பஞ்சாயத்து கூட்டி, ஒரு இறுதியான முடிவைத் தெரிந்து கொள்ள விரும்புகிறார்.
இந்த நிலையில், நேற்று முன்தினம் சன் டிவி நிறுவனத்தின் கேளம்பாக்கம் ஸ்டுடியோவுக்கு விளம்பரப் படப்பிடிப்புக்காக வந்திருந்தார் நயன்தாரா. அப்போது அங்கே வந்த ரஜினி, நயன்தாரா இருப்பதை அறிந்து அவரை வரச் சொல்லி பேசினார். இருவரும் சிறிது நேரம் தனியாகப் பேசிக் கொண்டிருந்தனர்.
ஏற்கெனவே, ரஜினியுடன் மூன்று படங்களில் நடித்துள்ளார் நயன்தாரா. சிம்புவுடனான காதல் முறிவுக்குப் பிறகு படங்களே நடிக்காமல் இருந்த நயன்தாராவை மீண்டும் நடிக்கச் சொன்னவர் ரஜினிதான். தனது சிவாஜி படத்திலேயே நயன்தாராவுக்கு ஒரு வாய்ப்பையும் கொடுத்தார். அதன் பிறகுதான் தனது இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்தார் நயன்.
இப்போது பிரபுதேவாவுடன் காதலாகி, அது ரம்லத்தை விவாகரத்து செய்யும் அளவுக்கு வந்திருப்பதால், நயன்தாராவுக்கு ரஜினி அறிவுரை கூறியிருக்கலாம் என்று தெரிகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக