புதன், 20 அக்டோபர், 2010

வெளியான படங்களுக்கு ஏற்பட்ட கதியைப் பார்த்த பிறகு, தீபாவளிக்கு தங்கள் படங்களை ரிலீஸ

Danush and Genelia
கடந்த வெள்ளிக்கிழமை வெளியான படங்களுக்கு ஏற்பட்ட கதியைப் பார்த்த பிறகு, தீபாவளிக்கு தங்கள் படங்களை ரிலீஸ் செய்யலாமா வேண்டாமா என்று யோசிக்க ஆரம்பித்துவிட்டார்கள் தயாரிப்பாளர்கள்.

கடந்த வாரம் வெளியான படங்களில் ஒச்சாயி, தொட்டுப் பார் தவிர வேறு எதுவும் திரையரங்குகளில் இருக்கிறதா என்றே தெரியாத நிலை. அந்தப் படஹ்களை ரிலீஸ் செய்த சில அரங்குகள், கூட்டம் [^] சற்று குறைந்தாலும் பரவாயில்லை, ஓட்ட எந்திரன் கிடைக்குமா என்று கேட்டு வருகிறார்கள். இன்னும் சிலர், பழைய படங்களை திரையிட ஆரம்பித்துள்ளனர்.

இந்த நிலையில் தீபாவளிக்கு வெளியாகும் படங்களின் எண்ணிக்கை மூன்றாகக் குறைந்துள்ளது.

தனுஷ் நடித்துள்ள உத்தமபுத்திரன், தயாநிதி அழகிரி [^] தயாரித்துள்ள வா குவாட்டர் கட்டிங், உதயநிதி ஸ்டாலின் [^] வாங்கி வெளியிடும் மைனா ஆகிய மூன்று படங்கள் மட்டுமே இப்போதைக்கு தீபாவளி ரேஸை சற்று தைரியமாக எதிர் கொள்கின்றன

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக