வியாழன், 28 அக்டோபர், 2010

தமிழினி தொடர்ந்தும் விளக்கமறியலில்


கைது செய்யப்பட்டுள்ள தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் மகளிர் பிரிவு தலைவி எனக் கூறப்படும் தமிழினி தொடர்பில் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து சட்டமா அதிபரின் ஆலோசனையைக் கோரியுள்ளதாக இரகசிய பொலிஸார் நீதிமன்றில் கூறியுள்ளனர். தமிழினி தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகள் அடங்கிய அறிக்கை சட்டமா அதிபருக்கு சமர்பிக்க்பட்டுள்ளதாக கொழும்பு நீதவான் நீதிமன்றில் அறிக்கை ஒன்றை சமர்பித்து இரகசிய பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். சட்டமா அதிபரின் ஆலோசனைக்கு அமைய சந்தேகநபர் தொடர்பில் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அறிவிக்கவுள்ளதாக இரகசிய பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்தக் கருத்துக்களை பரிசீலனைக்கு எடுத்துக் கொண்ட கொழும்பு பிரதம நீதவான் ரஸ்மி சிங்கப்புலி சந்தேகநபரை அடுத்த மாதம் 15ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக