சனி, 16 அக்டோபர், 2010

மண்ணெண்ணெய் ஊற்றி மனைவி உயிருடன் எரிப்பு-கணவன் வெறிச்செயல்

தூத்துக்குடியில் மனைவியை மண்ணெண்ணெய் ஊற்றி எரித்த கணவர் கைது செய்யப்பட்டார். மற்றொரு சம்பவத்தில் பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.

தூத்துக்குடி பெரியசாமி நகரைச் சேர்ந்தவர் ஜோசப்ராஜ். கூலித் தொழிலாளி. இவரது மனைவி ஜெயராணி. திருமணமாகி 9 ஆண்டு ஆகிறது. இவர்களுக்கு மார்க்கரெட், மான்சி என்னும் இரு மகள்கள் உள்ளனர். குடிப்பழக்கத்திற்கு ஆளான ஜோசப்ராஜ் அடிக்கடி குடித்துவிட்டு மனைவியை அடித்து சித்ரவதை செய்து வந்துள்ளார். இது தவிர குடிக்கப் பணம் கேட்டும் தொந்தரவு செய்துள்ளார்.

இந்நிலையில் கணவன் மனைவி இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. நள்ளிரவில் தூங்கிக் கொண்டிருந்த ஜெயராணி மீது ஜோசப்ராஜ் மண்ணெண்ணெயை ஊற்றி தீ வைத்தார். உடல் கருகிய அவரை தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

அங்கு அவரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இது குறித்து தென்பாகம் போலீசார் கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து ஜோசப்ராஜை கைது செய்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக