செவ்வாய், 5 அக்டோபர், 2010

சிறுவர் இல்லங்கள் பெருமளவு பணத்தை பெற்றுக் கொள்வதை இலக்காகக் கொண்டு செயற்பட்டு

யாழ் மாவட்டத்தில் பதிவு செய்யப் படாது 5 சிறுவர் இல்லங்கள் இயங்கி வருவதாக அரச சார்பற்ற நிறுவனப் பிரதிநிதி ஒருவர் தெரிவித்துள்ளார்.

யாழ் மாவட்டத்தில் யுத்தத்தைக் காரணங் காட்டி பதிவு செய்யப் படாது 5 சிறுவர் இல்லங்கள் இயங்கி வருவதாக அரச சார்பற்ற நிறுவனப் பிரதிநிதி ஒருவர் தெரிவித்துள்ளார்.
யாழ் மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்டு 32 சிறுவர் இல்லங்கள் இயங்கி வருவதுடன் தற்போது ஒரு சில சிறுவர் இல்லங்கள் விடுதிகளாக மாற்றப்பட்டு வருகின்றது. இவ்வாறாக மாற்றப்படுகின்ற சிறுவர் இல்லங்கள் தொடர்பில் சிறுவர் நன்நடத்தைத் திணைக்களம் எதுவித நடவடிக்கைகளும் மேற்கொள்ள முடியதுள்ளன எனவும் இவ்வாறாக மாற்றப்படும் சிறுவர் விடுதிகளில் சட்டவிரோதமான செயற்பாடுகள் நடைபெற்று வருவதாகத் தெரிவிக்கப் படுகிறது.

பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட பகுதியில் 5 அல்லது 6 சிறுவர் இல்லங்கள் இயங்கி வருகின்றன. சிறுவர்களை பெற்ரோருடன் மீள் இணைக்கும் செயற்திட்டத்தை ஒரு சில அரச சார்பற்ற நிறுவனங்கள் செய்து வந்துள்ள போதும் தற்போது இந்த திட்டம் மந்த கதியில் செயற்படுத்தப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

பதிவு செய்யப்படாது இயங்கும் சிறுவர் இல்லங்கள் தொடர்பில் சிறுவர் நலனில் அக்கறை உடைய அரச நிறுவனங்களோ அரச சார்பற்ற நிறுவனங்களோ அக்கறை செலுத்தாது கண்டும் காணாமலும் இருந்து வருகின்றது. இதற்கு அரசியலும் தனவந்தர்களும் காரணம் என தெரிவிக்கப்படுகிறது. குறிப்பாக இந்த சிறுவர் இல்லங்கள் பெருமளவு பணத்தை பெற்றுக் கொள்வதை இலக்காகக் கொண்டு செயற்பட்டு வருவதாக அப் பிரதிநிதி தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக