செவ்வாய், 19 அக்டோபர், 2010

வவுனியாவில் குண்டுவெடிப்பு! இருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்!

வவுனியா மில் வீதியில் இன்று இரவு 8:10 மணியளவில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனமொன்றில் இருந்து ஏற்பட்ட வெடிப்பினால் இருவர் காயமடைந்துள்ளனர். வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தவேளை வாகனத்தின் முற்பகுதியில் இந்த வெடிப்பு ஏற்பட்டதாகவும்.

இவ்வெடிப்பு சம்பவம் தொழில்நுட்ப கோளாறு காரணமாகவே இடம்பெற்றுள்ளது என இராணுவ பேச்சாளர் மேஜர் ஜெனரல் உபய மெதவல தெரிவித்துள்ளபோதும். இந்த வெடிப்பிற்கான காரணிகள் சந்தேகத்தையே தோற்றுவித்துள்ளதாக வவுனியா வாசியொருவர் தெரிவித்துள்ளார்.
வாகன உரிமையாளரும் அவரின் நண்பரும் வாகனத்தை நிறுத்தி வைத்துவிட்டு கடைக்கு சென்றபோதே இவ் வெடிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளது. இவ் வெடிப்பு சம்பவத்தினால் காயமடைந்த இருவரும் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். வெடிப்பு சம்பவம் தொடர்பாக வவுனியா பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக