ஞாயிறு, 10 அக்டோபர், 2010

அடிப்படை அத்தியாவசிய வசதிகள் எதுவும் செய்யப்படாமலேயே புதுக்குடியிருப்பில் மீள்குடியேற்றம்!

புதுக்குடியிருப்பு பிரதேச செயலகப் பிரிவில் இதுவரை 824 குடும்பங்களைச் சேர்ந்த 2525 பேர் மீள்குடியேற்றப்பட்டுள்ளனர்.செட்டிகுளம் நலன்புரி நிலையங்களில் தங்கியிருந்த 549 குடும்பங்களைச் சேர்ந்த 1,784 பேரும் நண்பர்கள்,உறவினர்கள் வீடுகளில் வசித்து வந்த 215 குடும்பங்களைச் சேர்ந்த 731 பேருமே விஸ்வமடு மேற்கு கிராம அலுவலர் பிரிவில் குடியமர்த்தப்பட்டுள்ளனர்.

இவர்களில் செட்டிகுளத்தில் நலன்புரி நிலையத்திலிருந்து வந்தவர்களுக்கே தறப்பாள் வழங்கப்பட்டுள்ளது.மன்னகண்டல்,மாணிக்கபுரம்,வள்ளுவர்புரம் கிராம அலுவலர் பிரிவுகளைச் சேர்ந்த மக்கள் அடுத்த வாரம் மீள்குடியேற்றம் செய்யப்படவுள்ளதாக புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் சி.தயானந்தா தெரிவித்தார்.புதுக்குடியிருப்பு பிரதேச செயலகமும் தற்காலிகமாக விஸ்வமடு மகாவித்தியாலய நூலகக்கட்டிடத்தில் இயங்க ஆரம்பித்துள்ளது.
அடிப்படை அத்தியாவசிய வசதிகள் எதுவும் செய்யப்படாமலேயே மீள்குடியேற்றம் இடம்பெறுவதாகவும் மழைகாலம் தொடங்கியுள்ளதால் மீள்குடியேற்றப்பட்டவர்கள் பெரும் அசௌகரியங்களுக்கு உள்ளாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
தற்காலிக கொட்டகையாவது அமைக்க தகரம், தடி,கம்புகள்,கிடுகுகள்,விவசாய உபகரணங்கள் உலருணவுப் பொருட்கள் உடனடியாக வழங்க ஆவன செய்யப்படவேண்டுமென மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக