ஞாயிறு, 24 அக்டோபர், 2010

கனடாவிலிருந்து செயற்படும் புலிகளின் பிரதான முகவர்கள் இருவர் யார் என்பது குறித்த

புலிகளின் சர்வதேச வலையமைப்பின் இரகசியங்களடங்கிய 20 ஆவணங்கள் கண்டுபிடிப்பு இராணுவம்!
புலிகள் அமைப்பின் சர்வதேச வலையமைப்பின் சகல இரகசியங்களும் அடங்கிய 20 ஆவணங்களை தாம் கண்டுபிடித்துள்ளதாக இராணுவப் புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர். இந்த இரகசிய ஆவணங்கள் விஸ்வமடு பிரதேசத்தில் மறைத்துவைக்கப்பட்டிருந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக சிரேஷ்ட அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

தமிழ் வர்த்தகர்கள் என்ற போர்வையில் சில நாடுகளில் செயல்பட்டுவரும் மாவீ தரேஸ்ராஜா, சுரேஷ் ஆகிய புலிகளின் சர்வதேச வலையமைப்பின் முன்னணி செயல்பாட்டாளர்கள் இருக்கும் இடங்கள், அவர்களது நிறுவனங்கள், சொத்துக்கள், வங்கிக் கணக்குகள் சம்பந்தமான தகவல்கள் இந்த ஆவணங்களில் அடங்குகின்றன. இந்தத் தகவல்களை சர்வதேச காவல்துறையினருக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அந்த அதிகாரி கூறியுள்ளார்.

கண்டுபிடிக்கப்பட்ட தகவல்களில் புலிகளுக்கு விமானம் ஓட்டும் பயிற்சிகளை வழங்கிய நாடுகள், விமானங்கள் கொள்வனவு செய்யப்பட்ட நாடுகள் தொடர்பான தகவல்களும் வெளியாகியுள்ளன. இதனைத்
தவிர, கனடாவிலிருந்து செயற்படும் புலிகளின் பிரதான முகவர்கள் இருவர் யார் என்பது குறித்த தகவல்களும் வெளிவந்துள்ளன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக