புதன், 27 அக்டோபர், 2010

சில்க் வேடத்தில் நடிப்பேன் ; ஆனா கிளாமரா நடிக்க மாட்டேன் - வித்யா பிடிவாதம்!


Vidhya balan interview about Silk Smitha biopicசில்க் வேடத்தில் நடிக்க தயாரா இருக்கிறேன்; ஆனால் அவரைப் போல கிளாமரா நடிக்க மாட்டேன், என்று நடிகை வித்யாபாலன் திடீரென கூறியிருப்பதால் சில்க் வாழ்க்கை வரலாறு படக்குழுவினர் குழப்பத்தில் உள்ளனர். தென்னகத்து சினிமாக்களில் கவர்ச்சியாக நடித்தவர் சில்க் ஸ்மிதா. இவரது வாழ்க்கை இந்தி மற்றும் தென்னகத்து மொழிகளில் படமாகிறது. சில்க் ஸ்மிதா வேடத்தில் வித்யாபாலன் நடிக்கிறார். பாலிவுட் தயாரிப்பாளர் ஏக்தா கபூர் தயாரிக்கிறார். மிலன் லுதாரியா இயக்குகிறார். படம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த வித்யா பாலனை இயக்குநரும், தயாரிப்பாளரும் சந்தித்தனர். முதலில் சுமுகமாக பேசிய வித்யா பாலன் திடீரென கண்டிஷன்களை போட ஆரம்பித்துவிட்டாராம்.

"சில்க் ஸ்மிதா நடித்த சி.டி.க்களை பார்த்திருக்கிறேன். மிகவும் கவர்ச்சியாக நடித்திருக்கிறார். அந்த கால கட்டத்தில் அவர் மாதிரி இந்திய சினிமாக்களில் யாரும் கவர்ச்சியாக நடித்திருக்க முடியாது. ஹாலிவுட் சினிமாக்களில்தான் அது மாதிரி நடிப்பார்கள். இந்த காலகட்டத்தில் அவர் மாதிரி நடிக்க வேண்டுமென்றால் இன்னும் கூடுதல் கிளாமரில் நடிக்க வேண்டும். ஒரு சில படங்கள் முழுவதும் லோ டாப்ஸ் உடைகள் அணிந்து மட்டுமே நடித்திருக்கிறார். பொது விழாக்களிலும் லோ டாப்ஸ் ஆடைகளையே அதிக பயன்படுத்தியிருக்கிறார். அவர் வாழ்க்கை எனும் போது இது மாதிரி நடிக்க கொஞ்சம் தைரியம் வேண்டும். அந்த தைரியம் எனக்கில்லை. பாடல் காட்சிகளில் என்னை ஆபாசமாக படம் பிடிக்க கூடாது. கிளாமரில் எப்போதும் ஒரு எல்லையில் இருக்கிறேன். இதிலும் அது போல்தான் நடிப்பேன் என்று கண்டிஷன் போட இயக்குநரும், தயாரிப்பாளரும் குழம்பிப் போய் இருக்கிறார்கள். அடுத்து என்ன செய்வது என யோசித்து வரும் வேளையில் சில்க் வேடத்தில் நடிக்க வித்யா ‌பொருத்தமானவராக இருப்பார் என்பதால் அவரை சமாதானம் பேசி நடிக்க வைக்க முயற்சிகள் நடந்து வருகின்றனவாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக