விண்ணைத் தாண்டி வருவாயா படத்தின் மூலம், தன்னை ஒரு ரொமாண்ட்டிக் ஹீரோவாக காட்டிய கௌதம் மேனன் மீது தனிப்பட்ட மரியாதை வைத்திருப்பதாக கூறும் சிம்பு அவரைதனது படத்தில் நடிக்க வைக்கப்போகிறாராம்.
வெப்பம், அழகர்சாமியின் குதிரை படங்களின் தயாரிப்பு பணி, நடுநிசி நாய்கள் படத்தின் இயக்கம் மற்றும் தயாரிப்பு என படு பிஸியாக ஒருக்கிறார் கௌதம்.
வழக்கமாக கௌதம் படத்தில் ஹிட்டான பாடல்களின் அணிவகுப்பு இருக்கும். ஆனால் நடுநிசி நாய்கள் பாடலே இல்லாத திரில்லரான படம். சாமிரா ரெட்டி - வீரா ஆகியோர் நடிப்பில் வளர்ந்து வருகிறது நடுநிசி நாய்கள். இதனை அடுத்து விண்ணைத் தாண்டி வருவாயாவின் இந்தி ரீமேக் பணிகள் கௌதமுக்காக காத்திருக்கு. இந்நிலையில் சிம்புவின் அழைப்பை ஏற்று போடா போடியில் ஒரு முக்கியமான கேரக்டரில் நடிக்கவிருக்கிறாராம்.
தனது படங்களில் எல்லாம் எப்படியாவது தலையை காட்டி விடுவது இயக்குனர் கே.எஸ் ரவிக்குமாரின் கொள்கை. அதே போல மின்னலே, வாரணம் ஆயிரம் போன்ற தனது படங்களில் ஒரு சிலகாட்சிகள் வந்து போயிருப்பார் கௌதம்.
இப்படி தனது படங்களில் நடித்து வந்த கௌதம் மற்றொருவரின் இயக்கத்தில் நடிக்கவிருப்பது குறிப்பிடத்தக்கதுதான். இயக்குனர் விக்னேஷ்சிவா இயக்கத்தில் ‘போடா போடி’யின் படப்பிடிப்பு லண்டலில் நடந்து வருகிறது. இதனால் தனது பகுதியை நடித்து கொடுக்க லண்டன் போகும் கௌதம் அங்கேயே 10 நாட்கள் தங்கி முடித்துக் கொடுத்துட்டுதான் வருவாராம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக