சனி, 23 அக்டோபர், 2010

சீதா வீட்டுக்கு வரும் கார்களால் மோதல்-மாயா புகார்

Seethaநடிகைகள் சீதா-மாயா திடீர் மோதல்-சீதாவைத் தேடி வரும் கார்களால் பிரச்சினை!

சீதா வீட்டுக்கும், கவர்ச்சி நடிகை மாயா வீட்டுக்கும் வரும் ஏகப்பட்ட கார்களால் இரு நடிகைகளுக்கும் இடையே மோதல் மூண்டது. இருவரும் ஆபாசமாக திட்டிக் கொண்டு சண்டை போட்டுள்ளனர். தற்போது இருவரும் போலீஸில் புகார் கொடுத்துள்ளனர்.

ஆண்பாவத்தில் அறிமுகமாகி கதாநாயகியாக பல படங்களில் நடித்தவர் சீதா. முன்னாள் குத்தாட்ட நடிகை மாயா. இவர்கள் இருவரும் சாலிகிராமம் புஷ்பா கார்டனில் அருகருகே உள்ள வீட்டில் வசிக்கின்றனர்.

நடிகை மாயா மீது சீதா விருகம்பாக்கம் போலீசில் புகார் அளித்துள்ளார். அதில், "என் வீட்டின் முன்னால் வண்டிகளை நிறுத்தி மாயா இடைஞ்சல் செய்கிறார். இது பற்றி கேட்டால் ஆபாசமாக திட்டுகிறார். மிரட்டவும் செய்கிறார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் மாயாவும் இன்று காலை போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு நேரில் வந்து சீதா மீது புகார் அளித்தார்.

அதில், "சீதா என் வீட்டு முன் கார்களை நிறுத்தி தொந்தரவு செய்கிறார். இதனால் நானும் என் மகளும் பாதிக்கப்பட்டுள்ளோம். கார்களை வீட்டு முன் நிறுத்துவதை தவிர்க்குமாறு பலமுறை சீதாவிடம் கூறினேன். அவர் கேட்கவில்லை. சீதா வீட்டில் இருக்கும் சதீஷும் அவருடன் மேலும் இருவரும் இணைந்து என்னை மிரட்டுகிறார்கள்," என்று குறிப்பிட்டுள்ளார்.

சீதாவைத் தேடி நிறைய கார்கள் வருகின்றன

பின்னர் நிருபர்களிடம் மாயா கூறுகையில், "சீதா வீட்டுக்கு தினமும் நிறைய கார்கள் வந்து போகின்றன. இதனால் என் வீட்டில் கார் நிறுத்த முடியவில்லை. எனது எட்டரை வயது குழந்தை விளையாடிக் கொண்டிருந்த போது சீதா வீட்டுக்கு வந்த ஒருவர் மோதுவது போல் காரை நிறுத்தினார்.

சீதா வீடு என நினைத்து சில பேர் என் வீட்டுக்கும் வந்து விடுகிறார்கள். இதனால் அவர்களுக்கும் எனக்கும் பிரச்சினை வந்து விடுகிறது. சீதா என்னை மோசமாக திட்டியதால்தான் நானும் பதிலுக்கு திட்ட வேண்டி வந்தது..", என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக