ஞாயிறு, 3 அக்டோபர், 2010

மணிசங்கர அய்யரின் போக்கு வேதனை தருகிறது-ஷீலா தீட்சித்

காமன்வெல்த் போட்டி குறித்து முன்னாள் அமைச்சர் மணிசங்கர அய்யர் நடந்து கொண்ட, நடந்து கொள்கிற விதம் வேதனையும், வருத்தமும் அளிப்பதாக உள்ளது என்று டெல்லி முதல்வர் ஷீலா தீட்சித் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில், போட்டிக்கான அனைத்து ஏற்பாடுகளும் சிறப்பாக முடிந்து விட்டன. போட்டியைக் காண நாடே ஆவலுடன் தயாராக உள்ளது.

இந்த நிலையில், மணிசங்கர அய்யர் போன்ற சிலர் நடந்து கொண்ட, நடந்து கொள்கிற விதம் வேதனை அளிக்கிறது. நான் மோசமாக உணர்கிறேன். இந்தப் போட்டி நடப்பதால் இவர்களுக்கெல்லாம் என்ன பிரச்சினை வந்து விடப் போகிறது என்று எனக்குத் தெரியவில்லை.

நாடே காமன்வெல்த் போட்டியைக் கொண்டாடப் போகும் வேளையில் இவர்களைப் போன்றவர்கள் நாட்டை விட்டே வெளியேறுவது மிகவும் மோசமான செயல் என்று கடுமையாக கூறினார் தீட்சித்.

காமன்வெல்த் போட்டி குறித்து ஆரம்பத்திலிருந்தே கடுமையாக சாடி வந்தவர் அய்யர். போட்டி நடக்கும்போது நான் நாட்டிலேயே இருக்க மாட்டேன் என்றும் கூறியவர். சொன்னபடியே நாட்டை விட்டு வெளியேறி லண்டனுக்கு ஓடி விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக