வெள்ளி, 8 அக்டோபர், 2010

கனடாவில் புகலிடம் கோரும் அகதிகள் தொடர்பில் கனேடிய புதிய சட்டவிதிகளை

கனடாவில் புகலிடம் கோரும் அகதிகள் தொடர்பில் கனேடிய அரசாங்கம் புதிய சட்டவிதிகளை பின்பற்றவுள்ளதாக அறிவித்துள்ளது. புகலிடம் கோரி சட்ட விரோத கப்பல்கள் அண்மைக் காலமாக கனடாவை நோக்கிப் பயணித்து வருகின்றன. இதனால் பல சட்டவிரோத செயல்களும் அதிகரிக்கக் காரணமாக அமைந்துள்ளதாக கனேடிய அரசாங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

அகதிகள் தொடர்பில் சட்டத்தில் மாற்றங்கள் கொண்டுவரப்பட்டு, அவை கடுமையாக நடைமுறைப்படுத்தப்படுமென அந்நாட்டின் பிரதமர் ஸ்டீபன் ஹார்பர் தெரிவித்துள்ளார்.
கடந்த ஆகஸ்ட் மாதம் 492 பயணிகளுடன் எம்.வி சன் சீ கப்பல் கனடாவை வந்தடைந்தது. 2009 ஆம் ஆண்டு சட்ட விரோதமாகக் கனடாவுக்குச் சென்ற 76 பேர் கைது செய்யப்பட்டனர்.
கனடாவில் புகலிடம் கோரும் இலங்கையர்களில் விடுதலைப்புலிகள் அமைப்பைச் சேர்ந்தவர்களும் உள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகிறது. விடுதலைப்புலிகள் அமைப்பை பயங்கரவாத சட்டத்துக்கமைய கனடா தடை செய்திருந்தது.
இலங்கை அகதிகளுடன் மற்றும் ஒரு கப்பல் கனடாவுக்குச் செல்ல இருப்பதாக கனேடிய இணையத்தளம் செய்தி வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக