ஞாயிறு, 3 அக்டோபர், 2010

புலிகளின் சித்திரவதைக்கூடம் கூட இராணுவத்தின் நடவடிக்கை மூலமாகத்தான் தெரியவந்தது

புலிகள் வெட்கித்தலைகுனிய வேண்டும்.
சில நாட்களுக்கு முன் இராணுவத்திடம் பிடிபட்ட புலிப்போராளி சித்திரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்ட வீடியோ புலிகளின் இணையத்தளங்கள் அனைத்திலும் வெளியிடப்பட்டு உள்ளது. புலி அபிமானிகளும் ஈமெயில் ஊடாக அதனை பலருக்கு அனுப்பி வருகின்றனர். நல்ல விடயம். உண்மைகள் வெளிவரவேண்டும். மாற்றுக்கருத்து இதில் கிடையாது. ஆனால் இந்த வீடியோ யாரால் எடுக்கப்பட்டுள்ளது. மனிதாபிமானம் கொண்ட ஒரு இராணுவ வீரனால் எடுக்கப்பட்டதாகத்தான் இருக்கிறது. அவனுடைய செல்போனால் எடுக்கப்பட்டு இந்த சித்திரவதை உலகம் ப+ராகவும் தெரியவந்துள்ளது. எம்முள் உள்ள கேள்வி என்னவெனில் புலிகளின் ஆட்சிக்காலத்தில் பலர் கைதுசெய்யப்பட்டு கொல்லப்பட்டார்கள். அவர்கள் கொல்லப்பட்ட விதம் யாருக்கும் தெரியாது. தெரிந்த புலிகளும் அதனை வெளியில் சொல்லத்தயாரில்லை. புலிகளின் சித்திரவதைக்கூடம் கூட இராணுவத்தின் நடவடிக்கை மூலமாகத்தான்  தெரியவந்தது. கைதுக்குப் பின்னர் நடைபெற்ற புலிப்போராளிகளின் மரணம் எவ்வளவு கொடுமையானதோ அதேயளவு புலிகளினால் கொல்லப்பட்டவர்களின் மரணமும் கொடுமையானதுதான்.  இந்த மரணங்கள் தொடர்பாகவும் விசாரணைக்கமிஷன் அமைக்கப்பட வேண்டும். புலிகளினால் கொல்லப்பட்டவர்களின் குடும்பங்களுக்கும் நட்டஈடு வழங்கப்பட வேண்டும்.
இராணுவத்தினரால் கொல்லப்பட்ட புலிகளின் வீடியாக்கள் இராணுவத்தில் உள்ள சிலரால் வெளியில் கொண்டு வரப்படுவதுபோல் புலிகளினால் கொல்லப்பட்டவர்கள் பற்றிய உண்மைகள் அது பற்றிய விபரம் தெரிந்த புலிகளினால் வெளியில் கொண்டு வரப்படவேண்டும். அதைவிடுத்து யாரோ இராணுவ வீரானால் வெளியிடப்பட்ட வீடீயோவை புலிகள் விழுந்தடித்து வெளியிடுவதற்கு வெட்கம் வேண்டும்.
புலிகள் இதுவரை வெளியிட்ட இராணுவம் மீதான குற்றச்சாட்டுக்களுக்கான ஆதாரங்கள் இராணுவீரர்களால் தான் வெளியில் கொண்டு வரப்பட்டவை. புலிகளின் காலத்தில் தற்போதுள்ள கைத்தொலைபேசி கமரா வசதிகள் இருந்ததில்லை. அப்படியிருந்தாலும் யாராவது ஒரு புலிபோராளி எடுத்திருந்தால் அவனது தலையில் உடனே பொட்டு வைக்கப்பட்டிருக்கும். அந்த அளவிற்கு புலிகள் மத்தியில் கடுமையான பாசிசப்போக்கு இருந்தது. புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள மக்கள் புலிகள் தொடர்பாக வாய்திறக்கவும் அனுமதியில்லை. சாப்பிடு தூங்கு உன்ர அலுவலைப்பார். இதை விடுத்து புலி தொடர்பாக வாய்திறந்தால் உயிர் இருக்காது. இப்படித்தான் நிலமை இருந்தது.
இந்த நிலமைகளுடன் ஒப்பிடுகையில் மனிதாபிமானம் கொண்ட இராணுவவீரர்கள் நடந்த உண்மைகளை வீடீயோவால் வெளியில் கொண்டு வருவது என்பது உண்மையில் போற்றத்தக்க விடயம்தான். அதனை புலிகள் வெளியில் கொண்டு வருவதற்கு வெட்கப்படத்தான் வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக