முன்னாள் புலி உறுப்பினராகவிருந்து, புனர்வாழ்வு பெற்ற சாந்தலிங்கம் கோகுல் ராஜா என்ற இளைஞர் சிங்களத் திரைப்படமொன்றின் கதாநாயகனாக நடிக்கும் வரம் பெற்றுள்ளார். |
பிரபல சிங்களத் திரைப்பட இயக்குனர் சஞ்சய லீலாரத்தினவின் நெறியாள்கையில் உருவாகி வரும் பிரஸ்தாப திரைப்படம் தற்போதைக்கு யாழ்ப்பாணத்தின் கீரிமலைப் பகுதியில் படமாக்கப்பட்டு வருகின்றது. புலிகள் அமைப்பிலிருந்த ஒரு இளைஞர் அதிலிருந்து விலகி சிங்கள யுவதியொருவரைக் காதலிக்கும் விடயமே திரைக்கதையாக இருக்கப் போகின்றது என்பதாக விடயமறிந்த வட்டாரங்களிலிருந்து தெரிய வருகின்றது. ஆயினும் எந்த இனத்தினதும் உணர்வுகளைப் புண்படுத்தாத வகையில் திரைப்படம் அமைந்திருக்கும் என அதன் இயக்குனர் லீலாரத்தின தெரிவிக்கின்றார். |
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக