செவ்வாய், 26 அக்டோபர், 2010

ஜெயா "டிவி', இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழுக்கு மு.க.அழகிரி நோட்டீஸ்

மதுரை:இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் மற்றும் ஜெயா "டிவி'க்கு, மத்திய அமைச்சர் மு.க.அழகிரி சார்பில், வக்கீல் பிரேம்ராஜ் அம்புரோஸ் அனுப்பியுள்ள நோட்டீஸ்:அக்., 22ம் தேதி, "இந்தியன் எக்ஸ்பிரஸ்' மதுரை பதிப்பில், அமைச்சர் மு.க.அழகிரி, டில்லி விமான நிலையத்தில், மத்திய அமைச்சர் ராஜாவை தரக்குறைவாக திட்டி அவமதித்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.ஜெயா "டிவி'யில் வந்த பொய்ச் செய்தியை, விசாரிக்காமல், இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழில் வெளியிட்டுள்ளனர். இதற்காக மறுப்பு வெளியிட்டு, எழுத்துப்பூர்வமாக மன்னிப்பு கேட்க வேண்டும். ஒரு கோடி ரூபாய் நஷ்ட ஈடு வழங்க வேண்டும்.இவ்வாறு கூறப்பட்டுள்ளது.இதேபோல ஜெயா "டிவி' அலுவலகத்திற்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
sundaram - Ruwais,ஐக்கிய அரபு நாடுகள்
2010-10-26 14:27:55 IST
தெரிந்தோ தெரியாமலோ இந்த செய்தியில் அமைச்சர் ராஜாவின் பெயர் இணைந்துவிட்டது. அமைச்சர் ராஜாவின் பெயர் இணைந்த செய்திக்கு வெறும் ஒரு கோடி என்று சொல்வது அமைச்சர் ராஜாவை அவமதிப்பது போல் இருக்கிறது. அது போவட்டும், அப்படி ஒண்ணுமே நடக்கலேன்னே வச்சுக்குவோம், சென்னை ஏர்போர்ட்டுல ஏகப்பட்ட பேரு கைல கோன் ஐஸ் மைக் வச்சுகிட்டு ஸ்டாலினை, அழகிரியை, ராஜாவை இது சம்பந்தமா கேள்வி கேட்டபோது ஏன் மூணுபேரும் மூஞ்சிய இறுக்கமா வச்சுகிட்டு போனிங்களாம். ஒருத்தர் கூட வாய தொறந்து "அப்படி எல்லாம் ஒன்னும் நடக்கல," ன்னு சொல்லலையே. அதுவும் போவட்டும், ராஜாவும் அழகிரியும் சேர்ந்து இருக்குற மாதிரி எதுவும் போட்டோ இருக்குங்களா? சும்மா, பாக்கத்தான்....
செந்தில் - மதுரை,இந்தியா
2010-10-26 13:14:35 IST
ஜெய TV -இல் எந்த காலத்தில் தான் உண்மையான செய்தியை கொடுத்து இருக்கிறார்கள்?...
Varun - madhurai,இந்தியா
2010-10-26 12:49:19 IST
ஒரு கோடி கொடுத்தால் யார் வேண்டுமானாலும் உங்களை திட்டலாமா?...
மணி.வி - சென்னை,ஓமன்
2010-10-26 09:27:08 IST
தரக்குறைவாகத் திட்டியிருக்கவே மாட்டார்! தனது 'தர'த்துகேற்பதான் 'பேசி'இருப்பார்!...
sathish - cbe,இந்தியா
2010-10-26 08:21:47 IST
போதுமா ஒரு கோடி ,,சும்மா கேட்பது தானே ஆயிரம் கோடி,, உங்களுக்கு கோடி என்பது இப்போ ஒரு ரூபாய் மாதிரி தானே,,,...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக