சனி, 2 அக்டோபர், 2010

நடிகர் சங்கம் மீது அனுஷ்கா கோபம்!

Actress Anushka angry with Nadigar sangamடிகர் சங்கத்தில் உறுப்பினர் ஆகச் சொல்லி அனுஷ்காவிற்கு ‌லெட்டர் மேல் லெட்டர் போட்டதாம் சங்கம். இரண்டு வருடத்திற்கு முன்பு ரெண்டு படத்தில், டைரக்டர் சுந்தர் சி இயக்கத்தில் மாதவன் ஜோடியாக நடித்த போதே மெம்பர் ஆகிவிட்ட அனுஷ்கா, இக்கடிதங்களை பார்த்து ரொம்பவே கடுப்பாகி விட்டாராம். ரெண்டு வருஷத்துக்கு முன் ரெண்டுல நடித்தபோ‌தே நான் உறுப்பினர் ஆயிட்டேன். ரெண்டாவது முறையும் மெம்பர் ஆகுன்னு லெட்டர் போட்டா என்ன அர்த்தம்? என திட்டி பதில் கடிதம் அனுப்பியிருக்கிறார். லெட்ஜரில் அனுஷ்கா சொன்னது உண்மை என தெரிந்ததால் கப் சிப் ஆகி விட்டது சங்கம். ஆனாலும் அம்மணியின் கோபம் இன்னமும் குறையவில்லையாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக