சனி, 30 அக்டோபர், 2010

தமிழ் மக்களிடம் எரிக் சொல்ஹெய்ம் மன்னிப்பு கோர வேண்டும் ‐ கொமின் தயாசிறி !

நோர்வேயின் சர்வதேச அபிவிருத்தி அமைச்சர் எரிக் சொல்ஹெய்ம், அப்பாவி தமிழ் மக்களிடம் மன்னிப்பு கோர வேண்டுமென பிரபல சட்டத்தரணி கொமின் தயாசிறி தெரிவித்துள்ளார். உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவிடம் சாட்சியமளித்த போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
யுத்தத்தின் போது தமிழ் மக்கள் எதிர்நோக்கிய அவலங்களுக்கு எரிக் சொல்ஹெய்மும் ஒர் முக்கிய பொறுப்பாளி என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். எரிக் சொல்ஹெய்ம் புலிகளுக்கு ஆதரவான முறையில் செயற்பட்டு வந்தாகவும், அரசாங்கத்தைச் சேர்ந்த சிலர் அதற்கு ஒத்துழைப்பு வழங்கியதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். புலிகளுடன் சொல்ஹெய்ம் நட்புறவினைப் பேணியதாகவும், சமாதான ஏற்பாட்டாளராக செயற்படவில்லை எனவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார். புலிகளுடனான சமாதான முனைப்புக்களின் போது நோர்வேயை சமாதான ஏற்பாட்டாளராக தெரிவு செய்தமை பாரிய தவறாகும் என அவர் தெரிவித்துள்ளார்.

ஆசிய கலாச்சாரத்தையோ, நாகரீகங்களையோ நோர்வே சமூகம் அறிந்திருப்பதற்காக நியாயம் கிடையாது எனவும் இதனால் சமாதான ஏற்பாட்டாளராக மேற்குலக நாடொன்றை தெரிவு செய்தமை பொருத்தமற்றதென அவர் சுட்டிக்காட்டியுள்ளார். யுத்த நிறுத்த உடன்படிக்கை வீழ்ச்சியடைந்தமைக்கான ஏதுக்களை விளக்கிய போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். தமிழ் சிங்கள மக்களின் மனநிலையை நோர்வே அரசாங்கமோ அல்லது எரிக் சொல்ஹெய்மோ அறிந்திருக்க வாய்ப்பில்லை என அவர்
சுட்டிக்காட்டியுள்ளார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக