புதன், 13 அக்டோபர், 2010

கனடாவில் தேடகம்,தோழர் சி.கா.செந்தில்வேல் அவர்கள் கலந்துகொண்டு நினைவுப் பேருரை

கனடாவில் தேடகம் அமைப்பினரால் தோழர் சிவம் அவர்களது நினைவும் தேடல் நூல் வெளியீடும் ஒக்ரோபர் 2ம் திகதி நடாத்தப்பட்டது. நிகழ்வில் இலங்கையில் இருந்து மார்க்சிச லெனினிசக் கட்சியின் பொதுச் செயலாளளர் தோழர் சி.கா.செந்தில்வேல் அவர்கள் கலந்துகொண்டு நினைவுப் பேருரை ஆற்றினார்.
நமது தோழர்கள் சிலர் வன்னிக்குச் சென்றோம். கண்கொண்டு பார்க்க முடியாத கோலத்தில் வன்னி இருந்தது. அங்கிருந்த பலருடன் உரையாடினோம். இது இங்குள்ள பலரால் உள்வாங்கிக் கொள்ள முடியாது.  இலங்கை இராணுவம் செய்த கொடுமைகளைச் சொன்னவர்கள் தம்மைப் பலாத்காரமாக புதுமாத்தளன் வரையிலும் இழுத்துக்கொண்டு போனவர்கள் செய்த கொடுமையையும் அவர்கள் சொன்னார்கள். சுட்டிருக்கிறார்கள். பிள்ளைகளைப் பிடித்து இழுத்துக் கொண்டு போயிருக்கிறார்கள். பிள்ளைகளைப்பிடித்துக் கொண்டு போனபோது வாகனத்தின் முன் படுத்துக்கிடந்து தடுத்த தந்தையின் தலைக்கு மேலால் வாகனத்தை ஏற்றிக் கொன்றிருக்கிறார்கள் என்று சொன்னார்.
இவ்வாறு தமது மக்களையே கொன்றொழித்த விடுதலைப் புலிகள் இயக்கம் ஒரு விடுதலை இயக்கம் என்று எப்படிச்சொல்வது என்று கேள்வி கேட்டார். இப்படி வன்னி மக்களிடம் தான் சென்று கேட்ட அனுபவங்களைப் பட்டியலிட்ட பொழுது புலம் பெயர் சூழலில் விடுதலைப்புலிக்கொடிகளுடன் தெருவில் இறங்கி போராட்டம் நடாத்தியவர்கள் பலர் வெட்கப்பட்டுத்தான் போனார்கள்.
தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டத்தில் சாதியத்தின் கொடுமை பற்றி விளக்கமளித்தபோது 1995ம் ஆண்டில் யாழ்ப்பாணத்தை விட்டு மக்கள் வெளியேறியபோது இரண்டு பிரிவினராகவே வேளியேறினோம். ஒன்று உயர்த்தப்பட்ட சாதி மற்றது தாழ்த்தப்பட்ட சாதி என்பதைக் கூறி, நாவற்குழி பாலத்தில் ஒன்றாகிய தமிழ் மக்கள் பாலம் கழிந்து இரண்டு பிரிவினராகவே சென்றதாகவும் சொன்னார். தமிழ்த் தேசியத்தின் பொய் முகம் கிழிந்து போகும் இடம் இதுதான். சாதிரீதியாக  மதரீதியாக பிரதேசரீதியாக பிளவுபட்டுள்ள தமிழினத்தை தமிழீழத்திற்குள் ஒன்று சேர்க்க முடியும் என்ற கட்டுக்கதை இன்றுவரை பொய்த்துப் போயுள்ளது. இறுதி யுத்தத்திற்குள் இடம் பெயர்ந்து போயிருந்த வவுனியா முகாம்களினுள் கூட தமிழ் மக்களிடத்தில் மிக மோசமான சாதி வெறி தாண்டவமாடியதை அனைவரும் அறிவர். இலங்கை அரசு எப்படி இலங்கை ஒரு நாடு. ஒரே மக்கள் என்று சொல்வது பச்சைப் பொய்யோ, அதைவிடப் பொய்யானது நாம் எல்லோரும் தமிழ் மக்கள். நாம் ஒரு இனம் என்று சொல்வது.
இந்த யுத்தத்தை விரும்பித் தொடங்கியவர்கள் புலிகளே என்றும் மக்களை மாட்டுமந்தைகள் சாய்ப்பது போல் தம்முடன் சாய்த்துக் கொண்டு போகிறவர்கள் புலிகள் தான் என்றும் இந்த மக்களை இலங்கை அரசு அழிப்பதை விட புலிகள் தான் தொடர்ந்தும் கோரமாக அழித்து வருகிறார்கள் என்றும் யுத்தம் நடந்த காலங்களில் தொடர்ந்து எழுதிக்கொண்டிருந்தவர்கள் நாங்கள். தமிழ்த் தேசியவாதிகளும் புலிகளின் உத்தியோகத்தர்களும் சொல்வது போல் தமிழ் மக்களும் புலிகளும் ஒன்றல்ல. புலிகள் வேறு தமிழ் மக்கள் வேறு என்று மிகவும் இறுக்கமாகச் சொல்லியிருந்தோம். வன்னியில் நடந்த சண்டையில் மக்களைப் புலிகள் கொத்துக் கொத்தாகச் சுட்டுத் தள்ளுகிறார்கள், யுத்தத்திற்குள்ளும் குழந்தைகளைக் கடத்துகிறார்கள் என்றும் நாம் சொல்லிக்கொண்டிருந்ததை வெறும் புலி எதிர்ப்புக் கோசமாக தேடகம் உட்பட பலர் தவிர்த்துவிட்டு செயற்பட்டுக் கொண்டிருந்தார்கள். இன்று இவர்கள் எல்லோருக்கும் சி.கா. செந்தில்வேல் அவர்கள் இலங்கையிலிருந்து வந்து சொல்ல வேண்டியிருக்கிறது
வெறும் மன்னிப்புக் கேட்டுவிடுவதன் மூலம் சகோதரப் படுகொலைகளிலும், கந்தன் கருணைப் படுகொலையிலும், காத்தான்குடிப் படுகொலையிலும், அறந்தலாவையிலும், வெருகல் ஆற்றிலும், முள்ளிவாய்க்காலிலும் கொல்லப்பட்ட அத்தனை இளைஞர்கள் வாழ்வும் வலியும் மறக்கப்பட்டுவிடுமா என்ன? ஒரு இனத்தின்  அழிவை முன்னின்று நடாத்தியவர்கள் விடுதலைப்புலிகள். தனது இனத்தை தானே அழித்த இனம் நம்முடையது. இந்த அழிவை தூபம் போட்டு வளர்த்தவர்கள் தமிழ்ஈழம் என்றும் தேசிய விடுதலை என்றும் சொல்லி அத்தனை அழிவுகளுக்கும் காரணம் கற்பித்துக் கொண்டிருந்தவர்களே. இவர்கள் எந்த சபையில் பாவமன்னிப்புக் 

கூட்டம் ரதன் அவர்களது நன்றி உரையுடன் முடடிவுற்றது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக