சனி, 16 அக்டோபர், 2010

மலையக மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் எஸ். விஜயகுமாரன் மாரடைப்பால் மரணம்!


மலையக மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் எஸ்.விஜயகுமாரன் மாரடைப்பு காரணமாக இன்று 16 ஆம் திகதி தனது 55 வயதில் காலமானார்.நேற்று காலையில் இவருக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது. இதன்போது இவரை உறவினர்கள் உடனடியாக டிக்கோயா கிளங்கன் மாவட்ட வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

எனினும் சிகிச்சை பலனின்றி இன்று காலை 9.45 மணியளவில் இவர் உயிரிழந்ததாக கட்சியின் முக்கியஸ்தர் ஒருவர் தெரிவித்தார்.
ஆரம்பத்தில் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் அதிகாரியாக செயற்பட்ட இவர் 1989 ஆம் ஆண்டு முதல் மலையக மக்கள் முன்னணியுடன் இணைந்து அரசியல் பணிகளில் ஈடுபட்டார்.
மலையக மக்கள் முன்னணியின் மத்திய குழுவிலும் பின்னர் கவுன்சிலிலும் அங்கத்துவம் பெற்ற இவர், கடந்த 6 வருடங்களுக்கும் அதிகமாக மலையக மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளராகக் கடமையாற்றி வந்தார்.
மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான அமரர் பெ.சந்திரசேகரனின் நம்பிக்கைக்குரியவராக இவர் செயற்பட்டு வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
அக்கரப்பத்தனை பசுமலையைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர், தற்போது ஹட்டன் நகரில் மல்லியப்பூ வீதியிலுள்ள தனது வீட்டில் வசித்து வந்தார். இவரின் மனைவி ஓர் ஆசிரியராவார். இவருக்கு இரண்டு பிள்ளைகள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக