வெள்ளி, 15 அக்டோபர், 2010

பேராதனை பல்கலைக்கழக சத்தியாக்கிரகம் கலஹா சந்திக்கு மாற்றம்!

பேராதனை பல்கலைக் கழக மாணவர்கள் கடந்த 4ஆம் திகதி முதல் பல்கலைக்கழக வளாகத்தில் நடத்தி வரும் சத்தியாக்கிரகப் போராட்டத்தை இன்று முதல் கண்டி – பேராதனை வீதியில் உள்ள கலஹா சந்திக்கு மாற்றத் தீர்மானித்துள்ளனர்.

கடந்த ஜூலை மாதம் பேராதனை பல்கலைக் கழகத்துக்கு வந்த உயர் கல்வி அமைச்சர் எஸ்.பீ. திசாநாயக்காவுக்கு இடையூறு விளைவித்ததாகக் கூறி சந்தேகத்தின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருக்கும் நான்கு பல்கலைக்கழக மாணவர்களையும் விடுவிக்குமாறு கோரியே இவர்கள் சத்தியகிரகம் செய்கின்றனர்.
விளக்கமறியலில் வைக்கப்பட்டிருக்கும் மாணவர்களை விடுவிக்கும் வரை சத்தியாக்கிரகப் போராட்டத்தைக் கைவிடப் போவதில்லை எனப் பேராதனை பல்கலைக்கழக மாணவர் சங்கம் கூறுகின்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக