ஞாயிறு, 3 அக்டோபர், 2010

குண்டுமேல் குண்டுபோட முடியுமா? : ஜெ. கொலை மிரட்டல் புகாருக்கு


மத்திய அமைச்சரும், திமுக தென் மண்டல அமைப்பாளருமான மு.க.அழகிரி இன்று  கீழமாத்தூருக்கு சென்று அங்குள்ள பகுதி மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். மேலும் ஏற்கனவே அந்த பகுதியில் பெறப்பட்ட மனுக்கள் மீதும் பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுத்தார்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம்,

’’கடந்த பாராளுமன்ற தேர்தலில் மதுரை மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்பட்டு வருகிறது. இன்று மதுரை மீனாட்சி அம்மன் கோவிலை சுற்றி அழகுப்படுத்தவும், பூங்காக்கள் அமைக்கவும் ர14 கோடி மதிப்பீட்டில் திட்டப்பணிகளுக்கான அடிக்கல் நாட்டப்பட்டது.
மேலும் திடீர்நகர் மேல வாசலில் புதிதாக கட்டப்பட்டுள்ள அடுக்குமாடி குடியிருப்புகள் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக இன்று திறந்து வைக்கப்பட்டது.

ஒவ்வொரு பகுதிக்கும் சென்று பொதுமக்களிடம் குறைகள் கேட்டு அவற்றை நிவர்த்தி செய்து வருகிறேன்.

கோரிக்கைக்கு தீர்வு கிடைத்தவர்கள் என்னிடம் மகிழ்ச்சியை தெரிவிக்கிறார்கள். அது எனக்கு மனநிறைவை தருகிறது’’என்று தெரிவித்தார்.
 
அப்போது செய்தியாளர்கள் அவரிடம்,   வருகிற 18-ந்தேதி நடைபெற உள்ள அ.தி.மு.க. கண்டன ஆர்ப்பாட்டத்தை சீர்குலைக்க கொலை மிரட்டல் விடுக்கப்படுகிறது என ஜெயலலிதா குற்றம்சாட்டி உள்ளாரே?என்று கேட்டதற்கு,

 குண்டுமேல் குண்டுபோட முடியுமா? என ஏற்கனவே நான் கூறி இருக்கிறேன். அதேதான் இப்போதும் கூறுகிறேன். அவர் சொல்வது குறித்து எனக்கு கவலை இல்லை.

 மீண்டும், மீண்டும் கொலை மிரட்டல்கள் வந்து கொண்டு இருக்கிறதே? என்று கூறி வருகிறாரே?என்று கேட்டதற்கு,

’சுய விளம்பரத்தை தேடிக்கொள்வதற்கும் ஜெயலலிதா இதை கூறி கொள்கிறார். அல்லது மதுரை கூட்டத்தை ரத்து செய்வதற்கு கூட இதனை ஒரு காரணமாக கூறி வருகிறார்’’என்று தெரிவித்தார்.
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக