வெள்ளி, 15 அக்டோபர், 2010

கொழும்பில் நகைக்கடை உரிமையாளர் கடத்தப்பட்டு பின் விடுதலை

கொழும்பு செட்டியர் தெருவில் உள்ள நகையக உரிமையாளர் ஒருவர் கடத்திச்செல்லப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளார் இனந்தெரியாதோர் அவரை கடந்த புதன்கிழமையன்று, இரவு 7.15அளவில் கடத்திச்சென்று, கொட்டாஞசேனை கிரீன் வீதியில் வைத்து நள்ளிரவு வேளையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
இவரை விடுவிப்பதற்காக, நகையக உரிமையாளரின் குடும்பத்தினர் 5 கோடி ரூபாவை கடத்தல்காரர்களுக்கு செலுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
செட்டியார் தெருவில் அமைந்துள்ள ரவி ஜூவலர்ஸின் உரிமையாளரான ஆர் மகேந்திரன் என்பவரே கடத்தி செல்லப்பட்டு விடுவிக்கப்பட்டவராவார்.
மகேந்திரனும் அவருடைய மகனும் கொட்டாஞ்சேனை கிரீன் வீதியில் வைத்து, ஜீப் ஒன்றில் ஆயுததாரிகளால் கடத்திச்செல்லப்பட்டனர்.
பின்னர் மகன் விடுவிக்கப்பட்ட நிலையிலேயே நகையக உரிமையாளரை விடுவிக்க கப்பம் கோரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக