சனி, 9 அக்டோபர், 2010

ஜயலத் ஜயவர்தன ஜெனீவாவில் சமர்ப்பித்த பிரேரணை நிராகரிப்பு..!

இலங்கையில் மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஜயலத் ஜயவர்தன ஜெனீவாவில் நடைபெற்ற ஜனநாயக மற்றும் மனித உரிமைகள் தொடர்பான பாராளுமன்ற அமைப்பில் சமர்ப்பித்த பிரேரணை அந்த அமைப்பினால் நிராகரிக்கப்பட்டுள்ளது. பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மஹிந்த சமரசிங்க அப்பிரேரணை தொடர்பாக சமர்ப்பித்த இலங்கையின் உண்மைநிலை தொடர்பான விளக்கத்தை கருத்திற்கொண்ட அமைப்பு ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஜயலத் ஜயவர்தன சமர்ப்பித்த பிரேரணையை முற்றாக நிராகரித்தது. மேற்படி அமைப்பின் கூட்டத் தொடரில் பங்குபற்றிய இலங்கை அரசாங்க அணியில் அமைச்சர் மஹிந்த சமரசிங்கவின் தலைமையில் நீர்ப்பாசன மற்றும் நீர் முகாமைத்துவ அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் நிருபமா ராஜபக்ஷ ஆகியோர் இடம்பெற்றிருந்தனர். எதிர்க்கட்சியை பிரதிநிதித்துவப்படுத்திய அணியில் பாராளுமன்ற உறுப்பினர் ஜயலத் ஜயவர்தனவுடன் ஐக்கிய தேசியக் கட்சியின் அகில விராஜ் காரியவசம் மற்றும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் சுரேஷ் பிரேமசந்திரன் ஆகியோர் இடம் பெற்றிருந்தனர். ஜயலத் ஜயவர்தனவின் பிரேரணையில் இலங்கையில் மனித உரிமை மீறல்கள் இடம்பெறுவதாகவும் அரசாங்கம் சர்வாதிகார போக்கில் நடந்து கொள்வதாகவும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டிருந்தன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக