வியாழன், 21 அக்டோபர், 2010

குமரன் பத்மநாதனின் சொத்து விபரங்களை வெளியிட முடியாது: அரசாங்கம்!

தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் சர்வதேச விவகாரப் பொறுப்பாளர் குமரன் பத்மநாதனின் சொத்து விபரங்களை வெளியிட முடியாது என அரசாங்கம் அறிவித்துள்ளது.பாதுகாப்பு காரணங்களை கருத்திற் கொண்டு இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டதாகத் தெரிவித்துள்ளது.

குமரன் பத்மநாதனின் சொத்து விபரங்களை வெளியிடுமாறு ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர கேள்வி எழுப்பியதற்கு பதிலளித்த போது ஆளும் கட்சியின் பிரதம கொறடா தினேஷ் குணவர்தன இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
குமரன் பத்மநாதனின் சொத்து விபரங்களை வெளியிடுமாறு ஐக்கிய தேசியக் கட்சி தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.அரசாங்கம் பாதுகாப்பு காரணங்களை சுட்டிக்காட்டி குமரன் பத்மநாதனின் சொத்துக்கள் தொடர்பான தகவல்களை வெளியிடுவதனை மறுத்து வருகின்றது.
தமிழீழ விடுதலைப் புலிகளின் சர்வதேச விவகாரப் பொறுப்பாளராக கடமையாற்றிய குமரன் பத்மநாதன் பெருமளவு சொத்துக்களை வைத்திருப்பதாக ஆளும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடந்த காலங்களில் தகவல் வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக