திங்கள், 4 அக்டோபர், 2010

இலங்கையில் இருந்து ஆட்களை வேலைக்கு சேர்ப்பதற்கு சவூதியில் தடைவிதிப்பு!

இலங்கையில் இருந்து பணியாளர்களை வேலைக்கு சேர்ப்பதற்கு சவூதிய அரேபிய அரசால் தடை விதிக்கப்பட்டுள்ளது.இலங்கையில் இருந்து பணியாளர்களை வேலைக்கு சேர்க்கின்றமை தொடர்பாக மறு அறிவித்தல் வரை ஒப்பந்தம் எதிலும் கைச்சாத்திட வேண்டாம் என்று சவூதி அரேபியாவில் உள்ள வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிலையங்களுக்கு சவூதியின் தேசிய ஆட்சேர்ப்பு சபையால் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
இலங்கையில் இருந்து பணியாளர்கள் சவூதிக்கு வருகின்றமையில் ஏற்படக் கூடிய கால தாமதங்களை கருத்தில் கொண்டே இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக