செவ்வாய், 19 அக்டோபர், 2010

ADMK கூட்டத்தால் குலுங்கியது மதுரை : மிரட்டல்களை மீறி பல லட்சம் பேர் திரண்டனர்

அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதா தலைமையில், மதுரையில் நேற்று நடந்த ஆர்ப்பாட்டத்தில், தொடர் மிரட்டல்களையும் மீறி  லட்சக்கணக்கானோர் குவிந்தனர். சித்திரைத் திருவிழா கூட்டத்தையும் மிஞ்சும் வகையில், திரண்ட தொண்டர்களால் மதுரையே குலுங்கியது.
கோவை, திருச்சியை தொடர்ந்து, மதுரையில் கடந்த மாதம் ஜெயலலிதா தலைமையில், அ.தி.மு.க., சார்பில், கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிட்டது. பல காரணங்களால் ஆர்ப்பாட்ட தேதி தள்ளிபோனது. அக்., 18ல்(நேற்று) ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது.நீண்ட நாட்களுக்கு பிறகு, ஜெயலலிதா மதுரை வருவதால், தென்மாவட்ட கட்சி நிர்வாகிகள் உற்சாகமடைந்தனர். பல லட்சம் பேர் குவியும் வகையில், மதுரை ரிங் ரோட்டில் தனியாருக்கு சொந்தமான இடம் தேர்வு செய்யப்பட்டது.இந்நிகழ்ச்சி பெரும் வெற்றியை பெற வேண்டும் என்பதற்காக இரவு, பகலாக ஓ.பன்னீர் செல்வம், செங்கோட்டையன் தலைமையில், அ.தி.மு.க., நிர்வாகிகள் உழைத்தனர்.

"மதுரை ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்கக் கூடாது, மீறினால் கடும் விளைவுகள் ஏற்படும்' என, ஜெயலலிதாவுக்கு தொடர் மிரட்டல்கள் விடப்பட்டன. அதை பொருட்படுத்தாமல், ஜெயலலிதா சென்னையில் இருந்து நேற்று மதியம் 1.45 மணிக்கு சிறப்பு விமானம் மூலம், மதுரை வந்தார்.அவருக்கு மீனாட்சி அம்மன் கோவில், ஸ்ரீவில்லிபுத்தூர் பட்டர்கள் பிரசாதம் கொடுத்து வரவேற்றனர். பின் கட்சி நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு கொடுத்தனர். விமான நிலையம் முதல் மேடை வரை சீருடை அணிந்த மாணவரணியினர் ஜெயலலிதாவுக்கு பாதுகாப்பு அளித்தனர்.விமான நிலையம் நோக்கி வந்த கட்சி நிர்வாகிகளின் கார்களை போலீசார் தடுத்ததால், தொண்டர்கள் மறியல் செய்ய முயன்றனர்.

அப்போது அவ்வழியே வந்த அ.தி.மு.க., பொருளாளர் ஓ. பன்னீர்செல்வம், "இந்த நேரத்தில் இதுபோன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது. அவரது காருக்கு பின்னால் தான் நாம் செல்ல வேண்டும்' என சமரசம் செய்ததால், போலீசார் நிம்மதி பெருமூச்சுவிட்டனர்.தொண்டர்களால் நிரம்பி வழிந்த ரிங் ரோட்டில், கட்சியினரின் வரவேற்பை பெற்றுக்கொண்டு, மாலை 4.18 மணிக்கு மேடைக்கு ஜெயலலிதா வந்தார். மாலை 4.44 மணிக்கு பேச்சை துவக்கி 6.39க்கு முடித்தார்.பேச்சின் பெரும்பகுதி மத்தியமைச்சர் மு.க.அழகிரியை தாக்குவதிலேயே இருந்தது. பின், தனக்கு மிரட்டல் விடுக்கப்பட்டது குறித்து பேசினார்.

"இந்த ஆட்சியில் எனக்கும் பாதுகாப்பு இல்லை; பொதுமக்களுக்கும் பாதுகாப்பு இல்லை' என்றார்.பெரியாறு பிரச்னையில் தி.மு.க., ஆட்சியின் நிலைப்பாடு குறித்து கண்டனம் தெரிவித்த அவர், தொடர் மின்வெட்டு, விலைவாசி, சட்டம் ஒழுங்கு, ரேஷன் அரிசி, லாட்டரி சீட்டு கடத்தல், சினிமா, கேபிள், "டிவி' துறைகளில் குடும்ப ஆதிக்கம் உட்பட பல்வேறு குற்றச்சாட்டுகளை ஆவேசமாக எடுத்துரைத்தார்.ஆளுங்கட்சியின் மிரட்டலுக்கு பயந்து, திருச்சி கூட்டம் குறித்து சரியாக செய்தி வெளியிடவில்லை என ஊடகங்களையும் சாட, ஜெயலலிதா தவறவில்லை.

இந்நிலையில், கூட்டம் நடந்த ரிங் ரோட்டின் சில பகுதிகளில் மழை பெய்தது. மேடை அருகே தூறல் விழுந்தது. அதை பொருட்படுத்தாமல் தொண்டர்கள், அவரது பேச்சை கவனித்தனர். மொத்தத்தில் சித்திரைத் திருவிழாவையும் மிஞ்சும் வகையில் லட்சக்கணக்கான தொண்டர்களை பார்த்த மதுரை மலைத்தது.போலீஸ் பாதுகாப்பு: ஜெ.,வுக்கு தொடர் மிரட்டல் காரணமாக, எப்போதும் இல்லாத அளவிற்கு தென்மண்டல ஐ.ஜி., கிருஷ்ணமூர்த்தி தலைமையில், மூன்று டி.ஐ.ஜி.,க்கள், ஏழு எஸ்.பி.,க்கள் தலைமையில், 3,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

தேர்தல் வரட்டும்; மக்கள் முடிவு அப்போது தெரியும்! : அ.தி.மு.க., ஆட்சி அமைய "கவுன்ட் டவுண்' துவங்கியது :  ஜெயலலிதா பேசியதாவது:வைகை கரைக்கு நான் வரக்கூடாது என்பதற்காக, எனக்கு அனுப்பப்பட்ட அச்சுறுத்தல் கடிதங்களை அழைப்பிதழாக ஏற்று நீதிகேட்க வந்துள்ளீர்கள். தெற்கு தமிழகத்தின் நுழைவுவாயிலாக இருக்கும் மதுரை, பாண்டிய மன்னர்கள் ஆதரவுடன் தமிழ் சங்கங்கள் தோன்றிய மதுரை. மகாலை உருவாக்கிய திருமலை நாயக்கர் ஆட்சி செத மதுரை. சிலப்பதிகாரத்தின் மையமாக இருந்த மதுரை. குற்றமற்ற கணவனுக்கு தண்டனை கொடுத்ததால், கற்புக்கரசி கண்ணகியால் எரிக்கப்பட்ட மதுரை. வீர பெண்மணி ராணிமங்கம்மாள் ஆட்சி செத மதுரை. வன்முறை, சுயநலம் உள்ள மதுரையாக இருப்பதை எப்படியும் எதிர்ப்பீர்கள் என நம்புகிறேன். ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார், குமாரசாமி ராஜா, காமராஜர், பக்தவத்சலம், அண்ணாதுரை, எம்.ஜி.ஆர்., உட்பட நானும் தமிழகத்தில் ஆட்சி செத போது, தமிழ்நாடு எப்படி இருந்தது?

கருணாநிதி தந்திரம்: "தம்பி தலைமை ஏற்கவா' என்று நெடுஞ்செழியனை அண்ணாதுரை அழைத்தார். "நீ முகம் காட்டினால் 30 லட்சம் ஓட்டுகள் கிடைக்கும்' என எம்.ஜி.ஆரை அண்ணாதுரை அழைத்தார். கருணாநிதியை அழைக்கவில்லை. ஆனால் தமிழக அரசியலில் போதாத காலம், கருணாநிதியை தந்திரங்கள் வென்றன. மீனாட்சி அம்மன் கோயில், சித்திரைத் திருவிழாவில் ஆற்றில் அழகர் இறங்குவது, கோரிப்பாளையம் பள்ளிவாசல், அமெரிக்கன் கல்லூரி ஆகியவை மதுரை என்றாலே நம் கண் முன் நிற்கும். ஆனால் இப்போது வன்முறை, கட்டப்பஞ்சாயத்து, கொலை, கொள்ளைதான் மனக்கண் முன் நிற்கின்றன.

இரு அரசுகள்: ஒருகாலத்தில் கோயிலுக்கு வரும் சுற்றுலா பயணிகளால் தூங்கா நகராக இருந்த மதுரை, தற்போது தூங்க முடியாத நகராகிவிட்டது. தமிழகத்தில் இரண்டு அரசுகள் உள்ளன. கருணாநிதி முதல்வராகவும், ஸ்டாலின் துணை முதல்வராகவும் சென்னையில் இருக்கும் ஒரு அரசு. அழகிரி தலைவராகவும், "பொட்டு' சுரேஷ் துணைக்கு இருப்பவராகவும் மற்றொரு அரசு இருக்கிறது. மதுரைக்கு ஸ்டாலின் வரவேண்டுமானால், அழகிரியிடம் விசா வாங்கிகொண்டுதான் வரவேண்டும். லீலாவதி கொலை வழக்கை நினைவூட்ட விரும்புகிறேன். மக்களுக்காக தண்ணீர் கொண்டு வர பாடுபட்ட, மார்க்சிஸ்ட் கவுன்சிலர் லீலாவதி பஜாரில் கொலை செயப்பட்டார். நான்கு தி.மு.க.,வினர் குற்றவாளிகள் என கோர்ட் தீர்ப்பு வழங்கியது. இவர்கள் உள்ளாட்சி தேர்தலில் வன்முறைகளில் ஈடுபட்டதற்கான ஆதாரங்கள் உள்ளன. தி.மு.க.,விற்கு வேலை பார்க்க பரோலில் விடுவிக்கப்பட்டனர்.

பயம் இல்லை: இதுபோன்ற சம்பவங்கள் இன்னும் தொடர வேண்டுமா என மக்களாகிய நீங்கள் முடிவு செய வேண்டும். எனக்கு மிரட்டல் விடப்பட்டது. அதை பற்றி நான் கவலைப்படவில்லை. தா.கிருஷ்ணன் கொலை வழக்கை மீண்டும் விசாரிக்க வேண்டும் என்றதும், தி.மு.க.,வினர் அஞ்சுகின்றனர். ஜெயா "டிவி' எனது பேச்சை நேரடியாக ஒளிபரப்புகிறது. யாரோ ஒருவர் இதைகண்டு அஞ்சுகிறார். இவர்கள் மிரட்டலை பார்த்து நான் பயப்படவில்லை.அரசியலுக்கு வந்தது முதல் பல கொலை மிரட்டலை பார்த்துவிட்டேன். பொ வழக்குகள் போடப்பட்டன. கொலை முயற்சி நடந்தது. யார் அஞ்சுகிறார்கள், யார் அஞ்சவில்லை என இந்த கூட்டத்தை பார்த்தாலே தெரிகிறது. நான் முதல்வராக இருந்தபோது, மின்வெட்டு கிடையாது. உபரி மின்சாரத்தை பக்கத்து மாநிலத்திற்கு விற்றதன் மூலம் வருவா கிடைத்தது. அனைத்து அனல்மின் நிலையங்களும் பராமரிக்கப்பட்டன. தரமான நிலக்கரி பயன்படுத்தப்பட்டது. தற்போது அனல்மின்நிலையம் மோசமாக பராமரிக்கப்படுகின்றன. பொறியியல் கல்லூரிகள் கருணாநிதி குடும்ப கட்டுப்பாட்டில் உள்ளன. மதுரையில் ஐ.டி. பூங்கா பணிகள் தாமதமாக நடப்பதற்கு காரணம் இருக்கிறது. அழகிரி பெயரில் மாட்டுத்தாவணி அருகே பல கோடி ரூபா செலவில் கட்டடம் கட்டப்பட்டு, ஐ.டி. நிறுவனங்களுக்கு வாடகைக்கு விடப்பட்டுள்ளது.

கூட்டத்தை தடுத்த போலீஸ்: கோவை கூட்டத்திற்கு 8 லட்சம் பேர் திரண்டதை பத்திரிகைகள் செதியாக வெளியிட்டிருந்தன. இதை பொறுக்க முடியாத கருணாநிதி, பத்திரிகைகளை மிரட்டினார். திருச்சி கூட்டத்திற்கு 18 லட்சம் பேர் திரண்டனர். இதை பத்திரிகைகள் இருட்டடிப்பு செதுவிட்டன. என்னிடம் பேசிய வடமாநில தலைவர்கள், கோவை கூட்டம் குறித்து பாராட்டினர். ஆனால் திருச்சி கூட்டம் பற்றி அவர்களுக்கு தெரியவில்லை. பத்திரிகைகள் இருட்டடிப்பு செததுதான் காரணம். எனது கூட்டங்களுக்கு வாகனங்கள் தரக்கூடாது என உரிமையாளர்கள் மிரட்டப்பட்டனர். திருச்சி கூட்டத்திற்கு 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பிற்கு அனுப்பப்பட்டனர் என கருணாநிதி கூறினார். ஆனால் உண்மையில் கூட்டத்தை தடுப்பதற்காகதான் போலீசாரை அனுப்பினார். இந்த தடையை மீறி மக்கள் வெள்ளமென திரண்டனர். திருச்சி கூட்டத்தில் பணத்தை அள்ளி செலவழித்தார் கருணாநிதி. அப்படியும் கூட்டம் வரவில்லை. ஆனால் அதை "ஆஹா... ஓஹோ...' என எழுதச்சொன்னார். தமிழகத்தின் பத்திரிகைகளுக்கு மனச்சாட்சி உண்டா, என அவர்கள் நினைத்து பார்க்க வேண்டும். கருணாநிதி மிரட்டல்களுக்கு பத்திரிகைகள் பயந்துவிட்டன. மதுரையின் பிரம்மாண்ட கூட்டம் பற்றி உண்மையான செதியை வெளியிடுகிறனவா என்று நாளை பார்த்தால்தான் தெரியும். பத்திரிகைகளை நம்பி நாங்கள் இல்லை. மக்களை நம்பி உள்ளோம். தேர்தல் வரட்டும், மக்கள் முடிவு என்ன என்பது அப்போது தெரியும். கருணாநிதி குடும்பத்திற்கு ஆறு சினிமா கம்பெனிகள் உள்ளன. சென்ற ஜனவரி முதல் வெளியான 63 படங்களில் 34 படங்கள் இவர்கள் தயாரித்தது. கடந்த இரண்டு ஆண்டுகளில், மற்றவர்கள் தயாரித்த 40க்கும் மேற்பட்ட படங்களை வெளியிட தயாரிப்பாளர்களை அனுமதிக்கவில்லை. தியேட்டர் உரிமையாளர்களையும் எச்சரித்துள்ளனர்.

நல்ல தீர்ப்பு: மதுரையில் நடக்கும் இந்த கூட்டத்தை ஜெயா "டிவி' நேரடியாக ஒளிபரப்புகிறது. ஆனால் பல இடங்களில் கேபிள் ஆப்பரேட்டர்கள் மிரட்டப்படுகின்றனர். என்னை அரசியலில் இருந்து விரட்டவும், ஒழித்துக் கட்டவும் முயற்சி நடக்கிறது. நான் தொடர்ந்து அரசியலில் இருக்க வேண்டும் என விரும்புகிறீர்களா? எனது தலைமையில் எம்.ஜி.ஆர்., ஆட்சியை அமைக்க விரும்புகிறீர்களா? இதற்கு அடுத்த தேர்தலில் நல்ல தீர்ப்பை நீங்கள் வழங்க வேண்டும். இலங்கை பிரச்னைக்காக 3 மணி நேரம் உண்ணாவிரதம் இருந்ததுதான் கருணாநிதியின் காமெடி. வரும் தேர்தலில் கருணாநிதிக்கு தக்க பாடம் புகட்ட வேண்டும். கருணாநிதி முதல்வர், ஸ்டாலின் துணை முதல்வர், அழகிரி மத்தியமைச்சர், கனிமொழி எம்.பி., இப்படி உலகில் எங்காவது குடும்ப அரசியல் உண்டா? எனது ஆட்சியில் லாட்டரி விற்க தடைவிதித்தேன். இன்றும் அந்த தடை உள்ளது. ஆனால், தமிழ்நாடு முழுவதும் லாட்டரி விற்கப்படுகிறது. வாகனங்களில் கடத்துகிறார்கள்.

இலவச பம்ப் செட்: திருச்சி ஆர்ப்பாட்டத்தில் விவசாயிகளின் துயரங்களை எடுத்து கூறினேன். மறுநாளே இலவச பம்புசெட் திட்டத்தை கருணாநிதி அறிவித்தார். 19 லட்சம் பேருக்கு இதை வழங்க 190 ஆண்டுகளாகும். இலவச வீடு வழங்கும் திட்டத்தில் 75 ஆயிரம் ரூபா வழங்குவதாக அறிவித்துள்ளார். இதில், ஒரு கழிப்பறை மட்டுமே கட்ட முடியும். நானூறு சதுரடி கொண்ட வீட்டிற்கு 3 லட்சம் ரூபா செலவாகும்.

ஒவ்வொருவருக்கும் ஒரு லட்சம்: ஒரு காலத்தில் இந்தியாவில் பெருமைமிகு மாநிலமாக தமிழகம் இருந்தது. தற்போது தடம் மாறிவிட்டது. இந்தியாவே வெட்கி தலைகுனியும் மாநிலமாக தமிழகம் உள்ளது. இவர்கள் கொள்ளையடித்த பணத்தை கொண்டு, தமிழகத்தில் ஒவ்வொரு குடிமகனுக்கும் 1 லட்சம் ரூபாக்கு மேல் கொடுக்கலாம். தமிழக நலனுக்காக மைனாரிட்டி தி.மு.க., அரசை தூக்கி எறிய வேண்டும். அந்த சக்தி உங்களிடம் உள்ளது. அனைத்து நதிகளும் இறுதியில் கடலை நோக்கி செல்கிறது. ஒரே ஒரு நதி கடலில் கலக்காமல் கண்மாயில் முடிகிறது. அது வைகை. சிவனுக்கு ஆலகால விஷம் கொடுத்ததால், கடலில் கலக்கக்கூடாது என நதிக்கு ரோஷம் வந்தது. இப்படி நதிக்கு கூட ரோஷம், வீரமுள்ள மண் மதுரை. அ.தி.மு.க., ஆட்சி அமைவதற்கான "கவுன்டவுண்' முன்பே துவங்கிவிட்டது.மதுரைக்கு பூரண விடுதலை கிடைக்கும். தீய சக்திகள் அப்புறப்படுத்தப்படுவர். தமிழக மக்கள் முடிவெடுக்கும் நேரம் வந்துவிட்டது. பணத்தை கொடுத்தால், வாக்காளர்கள் அடிபணிந்து ஓட்டுப்போடுவர் என்ற நம்பிக்கையில் தி.மு.க., உள்ளது.

கூட்டணி எப்படி: கூட்டணி எப்படி இருக்குமோ என்ற சிறிய சந்தேகம் உங்களுக்கு இருக்கலாம். எனது கணிப்பு சரியாக இருக்கும். மேலும், 2011 ல் கோட்டையை பிடிக்கும் ஒப்பற்ற இயக்கமாக அ.தி.மு.க.,இருக்கும். மதுரையில் 4 மணியிலிருந்து "கரன்ட்கட்' செயப்பட்டுள்ளதாக தற்போது எனக்கு ஒரு தகவல் வந்துள்ளது. எனது பேச்சின் நேரடி ஒளிபரப்பை யாரும் பார்க்கக்கூடாது என கருணாநிதி "பவர்கட்' செதுள்ளார். அடுத்த தேர்தலில் கருணாநிதியின் "பவரை' கட் செது, அவரை வீட்டுக்கு அனுப்ப வேண்டும். செவீர்களா?இவ்வாறு ஜெயலலிதா பேசினார். முன்னதாக மதுரை நகர செயலாளர் செல்லூர் ராஜூ, திண்டுக்கல் செயலாளர் நத்தம் விஸ்வநாதன் பேசினர்.

 ஜெ.,கூறிய கூட்டணி கதை :  மதுரை ஆர்பாட்டத்தில் பேசிய ஜெ.,  கூட்டணி குறித்து சொன்ன கதை:பொறியாளர் ஒருவர் மூன்று கிலோ மீட்டருக்கு பாலம் கட்டினார். ""இப்பாலத்தில் செல்லும் வாகனங்கள் 30 டன் எடை கொண்டதாக இருக்க வேண்டும். அதற்கு மேல் ஒரு குண்டூசி எடையைக்கூட பாலம் தாங்காது; இடிந்துவிடும்,'' என்றார். ஒரு லாரி 30 டன் சரக்குகளை ஏற்றிக்கொண்டு, பாலத்தில் சென்றது. மறுமுனையில் லாரியை வரவேற்க, அதிகாரிகள் திரண்டிருந்தனர். லாரி மீது சில புறாக்கள் அமர்ந்திருந்தன. குண்டூசி எடைக்கு மேல் புறாக்கள் இருக்குமே என மக்கள் அச்சமடைந்தனர். ஆனால், லாரி மறு முனையை அடைந்தது. இது குறித்து அந்த பொறியாளரிடம் ," புறாக்கள் அமர்ந்ததால், 30 டன்னிற்கு மேல் எடை அதிகரித்திருக்குமே,' என மக்கள் கேள்வி எழுப்பினர். பொறியாளர்,""இந்த ஒன்றரை கிலோ மீட்டரை லாரி கடந்தபின், டீசல் செலவாகிவிட்டது. புறாக்கள் அமர்ந்திருந்தாலும், 30 டன்னிற்கு மேல் எடை அதிகரித்திருக்காது,'' என்றார். அதுபோல் எனது கூட்டணி கணக்கும், கணிப்பும் சரியாக இருக்கும் என்றார்.

பரிசல்காரன் கதை:  முதல்வர் கருணாநிதியை குற்றம்சாட்டி ஜெ., கூறிய பரிசல்காரன் கதை: நான்குபுறமும் தண்ணீரால் சூழப்பட்ட கிராமத்திற்கு செல்ல பரிசல்காரர் இருந்தார். ஒருநாள் அந்த பரிசலில் ஆட்கள் ஏறும்போது, அங்கு விளக்குமாறு விற்பவர், ஒரு குரங்காட்டி, ஒரு பாம்பாட்டியும் உடன் ஏறினார். அப்போது கடைசியாக வந்தவர், மோசமானவர் என்பதால், அவரை ஏற்ற பரிசல் காரர் மறுத்தார். பொதுமக்கள் அவரின் கை, கால்களை கட்டிப் போட்டுவிடுவோம். அதனால் ஆபத்து வராது என்றனர். ஆனால் பரிசல்காரன், "கட்டிப்போட்டாலும் ஏதாவது செதுவிடுவான் என்று கூறி ஏற்ற மறுத்தார். பொதுமக்கள் மீண்டும் வற்புறுத்தியதால், அவரது கை, கால்களை கட்டியபடி வரவேண்டும் என்ற நிபந்தனையுடன் ஏற்றினார். நடுவழியில் செல்லும்போது, அந்த நபர் தனதுவாயால் விளக்குமாற்று குச்சியை உருவி, குரங்கின் கண்ணில் குத்த, அது துள்ளி பாம்பாட்டியின் கூடை மீது விழுந்தது. இதனால் பாம்புகள் பரிசலுக்குள் சிதறி ஓட, அதில் பயணித்தவர்களும் பதறி நடுங்கி, ஓடினர். இதனால் பரிசல் நடு ஆற்றில் கவிழ்ந்தது. பரிதாபம் காட்டியவரால் படகு நீரில் மூழ்கி பலர் இறந்தனர். அதைப் போல தமிழக அரசியலில் புகுந்தவர்தான் திருக்குவளை தீய சக்தியான கருணாநிதி.

குலுங்கி குலுங்கி சிரித்த ஜெ.,: * விமான நிலையத்தில் இருந்து மதியம் 1.45 மணிக்கு புறப்பட்ட ஜெ., வழிநெடுக தொண்டர்களின் வரவேற்பை பெற்றுக் கொண்டு மாலை 4.18 மணிக்கு மேடை ஏறினார்.
* "மைக்' முன்பு பேச ஆரம்பித்த கட்சி அமைப்பு செயலாளர் கருப்பசாமி, "மைக்" கீழாக சென்று "அம்மாவுக்கு வணக்கம்' என்று கும்பிட, ஜெ., சிரித்தார். பின், தொடர்ந்து பேசிய
கருப்பசாமி, கருணாநிதியை கிண்டல் செய்து "எத்தனை பெரிய மனிதருக்கு" என்ற பாடலை பாட, ஜெ., குலுங்கி குலுங்கி சிரித்தார்.
* மதுரையின் பல இடங்களில் கேபிள் "டிவி' இணைப்பு துண்டிக்கப்பட்டதால், "டிவி'யில் நேரடி ஒளிபரப்பை காணமுடியவில்லை என புகார் எழுந்தது. சில இடங்களில் மின் தடை செய்யப்பட்டதாக புகார் எழுந்தது. இது பற்றி மின்வாரிய மதுரை மண்டல தலைமை பொறியாளர் நச்சாடலிங்கம் ,"" மதுரையில் தினமும் இரண்டு மணி நேரம் அறிவிக்கப்பட்ட மின்தடை அமலில் உள்ளது. இதை ஆறு பிரிவாக பிரித்து அமல்படுத்துகிறோம். நேற்று கூடுதலாக மின்தடை செய்யவில்லை. அவ்வாறு கூறுவது தவறு,'' என்றார்.
* மதுரை ஒலி,ஒளி அமைப்பு பிரபலமானது. ஆனால் முதன்முறையாக சேலம் மகுடஞ்சாவடியில் இருந்து ஒலி,ஒளி அமைப்பை ஏற்படுத்தியிருந்தனர். தடை செயப்பட்ட கூம்புவடிவ ஒலிபெருக்கிகள் தாராளமாக பயன்படுத்தப்பட்டன.
*ஜெ., பேசிக்கொண்டிருக்கும்போதே, வெளியூர் தொண்டர்கள் தங்கள் ஊர்களுக்கு சாரை சாரையாக புறப்பட்டு சென்றனர்.
*இதற்கிடையே தூறல் விழுந்தது. அதை பொருட்படுத்தாமல் தொண்டர்கள் பேச்சை கவனித்தனர்.
* 12 ரூபா தண்ணீர் பாட்டில், 30 ரூபாக்கு விற்கப்பட்டது.
* ஆர்ப்பாட்டத்தில் ஜெயலலிதா கண்டன கோஷங்கள் எழுப்புவார் என தெரிவிக்கப்பட்டது. ஆனால் ஜெ கோஷங்கள் எதையும் எழுப்பாமல் பேச்சுடன் கூட்டத்தை முடித்துக் கொண்டார்.
*கருணாநிதி மற்றும் அவர் குடும்பத்தினர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை ஜெயலலிதா கூறினாலும், வெகு ஜாக்கிரதையாக "தகவல்கள் தெரிவிக்கின்றன' என கூறினார்.
* பேச்சின் இடையே இருமல் ஏற்பட்டது. பேச்சில் ஒன்பது முறை எம்.ஜி.ஆர்.,பெயரை உச்சரித்தார். எம்.ஜி.ஆர்., பாடல் உட்பட ஆறு பாடல்களை பாடினார். இரண்டு கதைகள் மூலம் கருணாநிதி ஆட்சிக்கு வந்தது பற்றியும், கூட்டணி குறித்தும் விளக்கினார்.

ஜெ., பாதுகாப்பில் 3000 போலீசார்: நேற்று தென்மண்டல ஐ.ஜி., கிருஷ்ணமூர்த்தி தலைமையில், டி.ஐ.ஜி.,க்கள் சந்தீப் மித்தல்(மதுரை), சைலேஷ் குமார் யாதவ் (திண்டுக்கல்), அமல்ராஜ் (ராமநாதபுரம்), எஸ்.பி.,க்கள் மனோகரன் (மதுரை), தினகரன்(திண்டுக்கல்), பாலகிருஷ்ணன்(தேனி), பிரதீப்குமார் (ராமநாதபுரம்), பிரபாகரன் (விருதுநகர்), ஆஸ்ரக் கார்க் (நெல்லை), ராஜேந்திரன்(கன்னியாகுமரி) ஆகியோர் தலைமையில், 20 டி.எஸ்.பி.,க்கள், 50 இன்ஸ்பெக்டர்கள், 250 எஸ்.ஐ.,க்கள் உட்பட 3 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். மேலும் 20 வெடிகுண்டு தடுப்பு பிரிவு குழுக்களும் ஆங்காங்கே சோதனையில் ஈடுபட்டன. நகரில் போலீஸ் கமிஷனர் பாலசுப்பிரமணியன் தலைமையில் துணை கமிஷனர்கள் ராஜேந்திரன், சின்னசாமி மற்றும் உதவிகமிஷனர்கள், இன்ஸ்பெக்டர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

ஜெ., ஆர்ப்பாட்டம்: ரிங் ரோடு ஸ்தம்பித்தது?* சென்னையில் இருந்து சிறப்பு விமானத்தில் மதியம் 12.40 மணிக்கு புறப்பட்ட ஜெ., மதுரைக்கு 1.40 மணிக்கு வந்தார்.
* ஜெ.,வை வரவேற்க மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் இருந்து இரு பட்டர்கள், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் இருந்து மூன்று பட்டர்கள், சிறப்பு பூஜைகள் செத பிரசாதங்களுடன் வந்தனர்.
* மதுரை விமான நிலையம் முதல் ரிங் ரோடு வரை மாநில மாணவரணி செயலாளர் நயினார் நாகேந்திரன், கோவை புறநகர் மாணவரணி செயலாளர் சந்திரசேகர் தலைமையில் கட்சி தொண்டர்கள் சீருடை அணிந்து பாதுகாப்பிற்கு நின்றிருந்தனர்.
*அ.தி.மு.க., தொண்டர்கள் பெரும்பாலானோர் வேன், லாரி "டாப்'களில் ஆபத்தான வகையில் உட்கார்ந்து பயணித்தனர். போலீசார் கண்டுகொள்ளவில்லை.
* மதியம் 12.45 மணிக்கு கட்சி நிர்வாகிகள் கார்கள், விமான நிலையம் ரோட்டில் அனுமதிக்கப்படாததால், ரிங் ரோடு மற்றும் மண்டேலா நகரில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
* இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஜெ., வரும் நேரத்தில் அ.தி.மு.க.,வினர் மறியலில் ஈடுபட முயன்றனர்.  அவர்களை நிர்வாகிகள் சமரசம் செதனர்.
* கூட்டணி கட்சிகளான ம.தி.மு.க., மூவேந்தர் முன்னணி கழகம், மூவேந்தர் முன்னேற்ற கழகம், புதிய தமிழகம், பா.பி., கட்சியினர் கொடிகளுடன் வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
* மேடை அருகே புதிய தமிழகம் கட்சியினர் தாங்கள் கொண்டு வந்த பெரிய கொடிகளை அசைத்தனர். அதை பார்த்த அவைத் தலைவர் மதுசூதனன், "தொண்டர்களுக்கு மறைக்கும் வகையில் இருப்பதால் ஓரமாக சென்று அசைக்கவும்' என அந்த கட்சி தொண்டர்களை கேட்டு கொண்டார்.
* மேடை அருகே பிரம்மாண்டமான கட்-அவுட்களில் மீது ஏறியிருந்த தொண்டர்களை இறங்கி வருமாறு, தொடர்ந்து "மைக்'கில் மதுசூதனன், பாலகங்கா எம்.பி., கேட்டு கொண்டனர்.
*மதுரை கே.கே.நகரைச் சேர்ந்த இரு தொண்டர்கள், தங்கத்தால் அலகு குத்தி வந்தனர்.
*ஆர்ப்பாட்ட நிகழ்ச்சிக்காக 20 ஏக்கர் பரப்பளவில் தயார் செயப்பட்ட இடத்தில், வெயிலையும் பொருட்படுத்தாமல் காலை 10 மணி முதலே தொண்டர்கள் குவிந்தனர். அவர்களை மகிழ்விக்க குத்தாட்டம், இன்னிசை கச்சேரி நடந்தது. சென்னை ஆவடி முன்னாள் கவுன்சிலர் பானுமதி  மேடை அருகே குத்தாட்டம் போட்டார்.
* கடும்வெயிலை தாங்க முடியாமல் தொண்டர்கள் பலர் நிழல் தேடி அலைந்தனர். மூன்று கி.மீ., தூரத்திற்கு நெரிசல் இருந்ததால், ஆர்ப்பாட்டத்திற்கு பலர் ரிங் ரோடு வழியாக வரமுடியவில்லை.
* போலீசை நம்பாமல் ரிங் ரோடு முதல் ஆர்ப்பாட்ட மேடை வரை சீருடை அணிந்த தொண்டரணியினர் பாதுகாப்பிற்கு நின்றிருந்தனர்.
* மைக்செட் வசதிகள் போதுமானதாக இல்லாததால், சிவகங்கை ரோடு சந்திப்பில் கூடியிருந்த ஆயிரக்கணக்கான தொண்டர்கள், "மேடை அருகே என்ன நடக்கிறது' என்று தெரியாமல் தவித்தனர்.
* இவ்வளவு பெரிய மக்கள் கூட்டத்தில் பெண்கள் எண்ணிக்கை குறைவாக இருந்தது. 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் ரிங் ரோடு முழுவதும் ஆக்கிரமித்திருந்தன.
* ஆர்ப்பாட்டம் நடந்த இடம் அருகே, பாண்டி கோயில் எதிர்புறம் டாஸ்மாக் கடை உள்ளது. இந்த கடை உட்பட சுற்றுப்புற பகுதி கடைகள் அனைத்தும் முன்னெச்சரிக்கையாக மூடப்பட்டிருந்தன. இந்நிலையில்,நேற்று மதியம் தொண்டர்கள் டாஸ்மாக் கடையை உடைத்து, சூறையாடினர். அங்கு பாதுகாப்பிற்கு நின்றிருந்த 4 போலீசார் ஒன்றும் செய முடியாமல் தவித்தனர்.
* கூட்டம் அதிகமானதால், சிந்தாமணி ரிங் ரோட்டில் வாகனங்கள் நிறுத்தப்பட்டன. அதில் வந்த தொண்டர்கள் அருகில் உள்ள வீட்டு உரிமையாளர்களிடம், "எவ்வளவு கி.மீ., நடந்து செல்ல வேண்டும்' என்று கேட்டதற்கு, "ஏழு கி.மீ., நடக்க வேண்டும்' என்று கூறினர். "அவ்வளவு தூரம் எங்களால் நடக்க முடியாது என சோர்ந்து அங்கேயே நின்றனர்.

வழி மாறிய ஜெயலலிதா  தொண்டர்கள் ஏமாற்றம் :  நேற்று மதியம் 1.45 மணிக்கு சிறப்பு விமானம் மூலம் ஜெயலலிதா வந்தார். ரிங் ரோடு வழியாக மேடைக்கு வந்தார். கூட்ட நெரிசலால் ஜெயலலிதாவை பார்க்க முடியாத தொண்டர்கள், அவர் திரும்பும் போதாவது பார்க்கலாம் என காத்திருந்தனர். இதனால் ரிங் ரோட்டில் தொடர்ந்து நெரிசல் ஏற்பட்டது. மாலை 4.44 மணி முதல் 6.38 மணி வரை ஜெயலலிதா பேசினார். கூட்டம் முடிந்து இரவு 7.50 மணிக்கு சென்னை புறப்பட, ரிங் ரோடு வழியாக விமான நிலையம் செல்ல திட்டமிட்டிருந்தார். ஆனால் ரிங் ரோட்டில் கூட்டம் அதிகமாக இருந்ததால், அந்த வழியே சென்றால் விமான நிலையத்தை அடைய குறைந்தது 2 மணி நேரமாகும் என்பதால், நகர் வழியாக செல்லலாம் என போலீசார் அ.தி.மு.க., நிர்வாகிகளிடம் கூறினர். அவர்கள் ஜெயலலிதாவின் கவனத்திற்கு கொண்டு சென்றனர். இதை அவர் ஏற்று கொண்டதை தொடர்ந்து, கோமதிபுரம் ரோடு, கலெக்டர் அலுவலகம் சந்திப்பு, கோரிப்பாளையம், தெற்குவாசல், அவனியாபுரம் வழியாக விமான நிலையத்திற்கு சென்று இரவு 7.32 மணிக்கு சென்னை புறப்பட்டார். வந்த வழியிலேயே அவர் வராததால், ரிங் ரோடு பகுதிகளில் காத்திருந்த தொண்டர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக