புதன், 27 அக்டோபர், 2010

உலகில் ஊழல் குறைந்த நாடுகள் வரிசையில் இலங்கை 91ஆவது இடத்தில்

உலகில் ஊழல் குறைந்த 178 நாடுகளில் இலங்கைக்கு 91ஆவது இடம் கிடைத்துள்ளது. ஜேர்மனியில் உள்ள பேர்லினை தலைமையகமாகக் கொண்டு இயங்கும் ‘ட்ரான்ஸ்பரன்ஸி’ இன்டர்நெஷனல் அமைப்பு நடத்திய ஆய்வின் படி புள்ளிகள் வழங்கி இப்பட்டியலை வெளியிட்டுள்ளதாக அவ்வமைப்பின் இலங்கைப் கிளைத் தலைவர் ஜே.சீ.வெலியமுன தெரிவித்துள்ளார். அதன் வருடாந்த அறிக்கையிலே இது தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்தியா 87ஆவது இடத்திலும் பாகிஸ்தான், மாலைத்தீவு என்பன 143ஆவது இடத்திலும் பூட்டான் 36ஆவது இடத்திலும் உள்ளன. தென்கிழக்காசிய நாடுகளில் பூட்டான் ஊழல் குறைந்த நாடாக உள்ளது.
கடந்த வருடம் இலங்கை 3.1 புள்ளியைப் பெற்று 97ஆவது இடத்தில் இருந்தது. இம்முறை 3.2 புள்ளியைப் பெற்ற போதும் முன்தள்ளப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக