வியாழன், 14 அக்டோபர், 2010

வெள்ளிக்கிழமை 8 புதுப்படங்கள் ரிலீஸ்!

Sheryl Brindo and Sundar Cவருகிற வெள்ளிக்கிழமை (15-ந்தேதி) வாடா, கௌரவர்கள், நானே என்னுள் இல்லை, தொட்டுப்பார், ஒச்சாயி, ஆர்வம், தங்க பாம்பு, ஸ்பீடு ரிட்டர்ன்ஸ் ஆகிய 8 புதுப் படங்கள் ரிலீசாகின்றன.

அடுத்த இருவாரங்கள் கழித்து, தீபாவளிக்கு உத்தமபுத்திரன், மைனா, வ குவார்ட்டர் கட்டிங், வல்லக்கோட்டை போன்ற படங்கள் வருவதால் முன்னதாகவே இந்த படங்களை வெளியிடுகின்றனர்.

வாடா படத்தில் சுந்தர் சி., கிரண், விவேக் நடித்துள்ளனர். வெங்கடேஷ் இயக்கி உள்ளார். ஆக்ஷன் படமாக உருவாகியுள்ளது.

கௌரவர்கள் படத்தில் சத்யராஜ், மோனிகா நடித்துள்ளனர். சஞ்சய்ராம் இயக்கியுள்ளார். தாதாக் களுக்குள் நடக்கும் மோதலே இப்படத்தின் கதை.

நானே என்னுள் இல்லை படத்தை பழைய கதாநாயகி ஜெயசித்ரா இயக்கி உள்ளார். அவரது மகன் அம்ரேஷ் கணேஷ் நாயகனாக நடித்துள்ளார்.

தொட்டுப்பார் படத்தில் விதார்த், லக்ஷனா ஜோடி யாக நடித்துள்ளனர். கே.வி. நந்து இயக்கி உள்ளார். காதல் கலந்த ஆக்ஷன் படமாக உருவாகி உள்ளது.

ஒச்சாயி படத்தில் தயா, தாமரை, ராஜேஷ், பருத்தி வீரன் ஒமுரு ஆகியோர் நடித்துள்ளனர். ஓ. ஆசைத் தம்பி இயக்கி உள்ளார். திரவிய பாண்டியன் தயாரித் துள்ளார். காதல் ஆக்ஷன் படமாக உருவாகியுள்ளது.

ஆர்வம் படத்தில் புது முகங்கள் நடித்துள்ளனர். ஆதித்யன் இயக்கி உள்ளார்.

பாலமுருகன் இயக்கிய தங்க பாம்பு படமும் வருகிறது.

ஸ்பீடு ரிட்டர்ன்ஸ் என்ற ஆங்கில படமும் தமிழில் டப்பிங் செய்யப்பட்டு 15-ந் தேதி ரிலீசாகிறது. வருகிற 22-ம் தேதிதான் இந்தப் படங்களை வெளியிட முடிவு செய்திருந்தனர் திரையரங்க உரிமையாளர்கள். ஆனால் தயாரிப்பாளர்கள் நெருக்கடி தாங்காமல் ஒரு வாரம் முன்கூட்டியே வெளியிடுகின்றனர். பெரும்பாலான படங்கள் ஒரு காட்சிதான் திரையிடப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக