செவ்வாய், 26 அக்டோபர், 2010

கூடுதல் டிஎஸ்பி தோட்டத்தில் பயிரிடப்பட்டிருந்த ரூ. 4 கோடி கஞ்சா-தீவைத்

சிவகங்கை அருகே 5 ஏக்கர் நிலப்பரப்பில் பயிரிடப்பட்டிருந்த ரூ. 4 கோடி மதிப்பிலான கஞ்சா செடிகளை மாவட்ட எஸ்.பி. ராஜசேகரின் உத்தரவின் பேரில் போலீஸார் தீவைத்து அழித்தனர். இந்த தோட்டம், விருப்ப ஓய்வு பெற்ற கூடுதல் டிஎஸ்பி அய்யாசாமிக்குச் சொந்தமானதாகும்.

சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்தவர் அய்யாசாமி. இவர் சென்னை சைபர் கிரைம் போலீஸ் பிரிவில் கூடுதல் டிஎஸ்பியாக பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்றவர். ஓய்வுக்குப் பின்னர் சிவகங்கை மாவட்டம் புழுதிப்பட்டி கிராமத்தில், வசித்து வருகிறார். இங்கு அவருக்கு சொந்தமாக 70 ஏக்கர் நிலம் உள்ளது.

இதில் 5 ஏக்கர் நிலத்தில் கஞ்சா பயிரிடப்பட்டிருப்பதாக புழுதிப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் மாடசாமிக்கு புகார் வந்தது. இதை அவர் மாவட்ட எஸ்.பி. ராஜசேகருக்குத் தெரிவித்தார். ராஜ சேகர் நேரில் வந்து ஆய்வு நடத்தினார். இதையடுத்து கஞ்சா செடிகளை அழிக்குமாறு அவர்உத்தரவிட்டார். இதையடுத்து ரூ. 4 கோடி மதிப்பிலான கஞ்சாப் பயிர்கள் தீவைத்து அழிக்கப்பட்டன.

கஞ்சா வளர்த்தது தொடர்பாக வாசு என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். அய்யாசாமியிடமும் விசாரணை நடத்தப்படவுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக