இஸ்லாமாபாத் : நியூயார்க் டைம்ஸ் சதுக்கத்தை தகர்க்க பைசல் ஷாசத்திற்கு பாகிஸ்தானில் தடை செய்யப்பட்ட தெஹ்ரிக்-இ- தாலிபன் பயங்கரவாதிகள் 43 ஆயிரம் அமெரிக்க டாலர் நிதியிதவி அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த ஒரு சில மாதங்களுக்கு முன்னர் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள டைம்ஸ் சதுக்கத்தை தககர்க்க முயற்சி நடந்தது. இந்த வழக்கில் பைசல் ஷாசத் என்பவன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டான். கடந்த மாதம் ஷாசத்திற்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. இந்நிலையில் இந்த நியூயார்க் டைம்ஸ் சதுக்கம் தகர்ப்பு தொடர்பாக ஷாசத்திற்கு உடந்தையாக இருந்ததாக கருதப்படும் குற்றவாளி ஒருவன் பாகிஸ்தானில் கைது செய்யப்பட்டான். அவனிடம் பாகிஸ்தான் அதிகாரிகள் விசாரணை நடத்தி ராவல்பிண்டி பயங்கரவாத தடுப்பு கோர்ட்டில் வாக்குமூலத்தை தாக்கல் செய்தனர். அதில் குற்றவாளி தெஹ்ரிக் இ தாலிபன் பயங்கரவாத அமைப்பின் தலைவர் ஹமிமுல்லா மெஹ்சுத்தை சந்தித்ததாகவும்,டைம்ஸ் சதுக்கத்தை தகர்க்க டைசல் ஷாசத்திற்கு அந்த அமைப்பு 43 ஆயிரம் அமெரிக்க டாலர் வரை நிதியுதவி செய்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக