புதன், 13 அக்டோபர், 2010

சிலி நாட்டில் சுரங்கத்தில் சிக்கிய 33 பேரில் ஐவர் பத்திரமாக மீட்பு

சிலி நாட்டில் சுரங்கத்தில் சிக்கிய 33 பேரில் ஐவர் பத்திரமாக மீட்கப்பட்டார். பிளாரன்சியோ அவாலாஸ் என்பவரே முதலில் மீட்கப்பட்டார்.
சுமார் 69 நாள் போராட்டத்துக்குப் பிறகு அவர்களை மீட்கும் பணிகள் நேற்றிரவு தொடங்கின.
அதில் சிக்கியுள்ள ஏனைய 32 பேரை மீட்கும் பணிகள் தொடர்கின்றன. சம்பவ இடத்திற்கு சிலி நாட்டு அதிபர் செபஸ்தியன் பினேராவும் வருகை தந்துள்ளார்.
சிக்கியுள்ளவர்களின் உறவினர்கள், பொதுமக்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் அவ்விடத்தில் குழுமியுள்ளனர்.
இதற்கென விசேட மீட்பு உபகரணத்தின் மூலமே மீட்பு பணிகள் இடம்பெற்று வருகின்றன. நாசாவும் இம்மீட்புப் பணியில் இணைந்துள்ளது.
ஆகஸ்ட் 5ஆம் திகதி நிலத்தின் கீழ் சுமார் 700 மீற்றர் ஆழத்தில் 33 சுரங்கத்தொழிலாளர்கள் அகப்பட்டுக் கொண்டனர்.
அவர்களை மீட்பதற்கு கடும் பிரயத்தனங்கள் மேற்கொள்ளப்பட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.
பல ஊடகங்கள் மீட்புப்பணியை நேரடியாக ஒளிபரப்பி வருகின்றன. இதனை உலகம் முழுவதும் கோடிக்கணக்கானோர் இதனைப் பார்வையிட்டு வருவதாகவும் மதிப்பிடப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக