இஸ்லாமாபாத்: கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த 32 இந்திய மீனவர்களை அத்துமீறி பாகிஸ்தான் எல்லைக்குள் நுழைந்ததாக்க கூறி பாகிஸ்தான் அதிகாரிகள் கைது செய்தனர்.
இந்திய மீனவர்கள் நேற்று பாகிஸ்தான் எல்லைக்குள் 60 மைல் தூரம் நுழைந்துவிட்டதாக மாரி டைம் செக்யூரிட்டி ஏஜென்சி தெரிவித்தது.
கைது செய்யப்பட்ட மீனவர்களை கராச்சிக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு வைத்து அவர்களின் அடையாளம், எதற்காக பாகிஸாதன் எல்லைக்குள் நுழைந்தனர் என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
மாரிடைம் எல்லையைத் தாண்டுவதாகக்கூறி இந்தியாவும், பாகிஸ்தானும் மாறி மாறி மீனவர்களை கைது செய்வது வழக்கம். இதில் விந்தை என்னவென்றால் தண்டனைக் காலம் முடிந்தும் மீனவர்கள் வருடக் கணக்கில் சிறையில் வாடுவது தான்.
பாகிஸ்தான் சிறைகளில் வாடும் இந்திய மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று 2 தொண்டு நிறுவனங்கள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன. இதையடுத்து பாகிஸ்தான் 442 இந்திய மீனவர்களை விடுதலை செய்தது. அண்மையில் கராச்சியில் உள்ள நீதிமன்றம் மேலும் 142 மீனவர்களை விடுவிக்குமாறு உத்தரவிட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக