செவ்வாய், 12 அக்டோபர், 2010

20 வருடம் உறைய வைத்த கருவில் இருந்து பிறந்த குழந்தை: யு.எஸ்.சில் அதிசயம்

நியூயார்க்: சுமார் 20 ஆண்டுகள் உறைய வைக்கப்பட்ட கருவில் இருந்து ஒரு ஆண் குழந்தையைப் பெற்றுள்ளார் 42 வயதான ஒரு பெண்மணி.

கரு இத்தனை ஆண்டுகளாக உறைய வைக்கப்பட்டு ஒரு பெண்ணின் கருப்பையில் வெற்றிகரமாக செலுத்தப்பட்டது இதுவே முதல் முறை.

வெர்ஜீனியா நார்போக்கில் உள்ள ஜோன்ஸ் இன்ஸ்டிடியூட் பார் ரீபுரக்டிவ் மெடிசின் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற பிறகு அந்தப் பெண் கடந்த மே மாதம் குழந்தையை பெற்றெடுத்தார். அந்தப் பெண் குழந்தைக்காக 10 வருடங்களாக சிகிச்சை பெற்றதாக அவரின் மருத்துவர் செர்ஜியோ தெரிவித்தார்.

இந்தக் கருவை இந்த மையத்தில் சிகிச்சை எடுத்துக் கொண்ட ஒரு தம்பதி நன்கொடையாக அளித்துள்ளனர். இதை சுமார் 19 வருடங்கள் 7 மாத காலமாக உறையவைத்துள்ளனர்.

உறையவைத்த 5 கருக்கள் வெதுவெதுப்பாக்கப்பட்டது. இதில் பிழைத்த 2 கருக்கள் கருப்பைகளில் செலுத்தப்பட்டது. அந்த இரண்டில் ஒன்று தான் வெற்றிகரமாக வளர்ந்து குழந்தையாகியுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக