வியாழன், 28 அக்டோபர், 2010

பழம்பெரும் நடிகை காஞ்சனா. ஏழுமலையானுக்கு ரூ 15 கோடி மதிப்புள்ள நிலம் வழங்கிய

Jayalalitha with Kanchanaதிருப்பதி: திருமலை ஏழுலையான் கோயிலுக்கு 15 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தை தானமாகக் கொடுத்துள்ளார் பழம்பெரும் நடிகை காஞ்சனா.

எம்ஜிஆர், சிவாஜி உள்ளிட்ட ஜாம்பவான்களுடன் நடித்தவர் நடிகை காஞ்சனா. தெலுங்கிலும் ஏராளமான படங்கள் நடித்துள்ள இவர் தற்போது பெங்களூரில் வசிக்கிறார்.

இந்த நிலையில், சென்னை ஜிஎன் செட்டி சாலையில் தனக்கு சொந்தமான ரூ 15 கோடி மதிப்பிலான நிலத்தை திருமலை திருப்பதி தேவஸ்தானத்துக்கு நன்கொடையாக அளித்து பத்திரப் பதிவும் செய்து கொடுத்தார். இந்த இடத்தில் கல்யாண மண்டபம் அல்லது சமூக நலக்கூடம் அமைக்க வேண்டும் என்றும் அவர் தேவஸ்தான அதிகாரிகளிடம் கேட்டுக் கொண்டார்.

சில தினங்களுக்கு முன்பு கூட காஞ்சனா மிகுந்த பணக்கஷ்டத்தில் இருப்பதாக செய்திகள் வந்தன. மனநிலை சரியில்லாததால் அவரை உறவினர்கள் கைவிட்டுவிட்டதாகவும், குடியிருக்க வீடு கூட இல்லை என்றும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால் அதை உடனடியாக மறுத்து விளக்கமளித்திருந்தார் காஞ்சனா.

அவரிடம் இவ்வளவு நிலம் இருப்பது பற்றி யாருக்கும் தெரியவும் இல்லை. அவரும் அதைக் காட்டிக் கொள்ளவில்லை!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக