வியாழன், 7 அக்டோபர், 2010

குடாநாட்டில் கல்வியங்காட்டில் 10 கொள்ளையடிக்கும் சம்பவங்கள்

குடாநாட்டில் பட்டப்பகலில் வீடுகளுக்குள் புகுந்து திருடும் சம்பவங்கள் அதிகரிப்பு!

குடாநாட்டில் பட்டப்பகலில் வீடுகளினுள் புகுந்து கொள்ளையடிக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருவதால் பொதுமக்களை எச்சரிக்கையாக இருக்குமாறு பொலிஸார் தெரிவித்துள்ளனர். கல்வியங்காடு விளையாட்டரங்கு வீதியிலுள்ள வீடொன்றினுள் செவ்வாய்க்கிழமை வீட்டின் பின் கதவால் புகுந்த திருடர்கள் அங்கிருந்த நகைகள் மற்றும் 15 ஆயிரம் ரூபா பணம் என்பவற்றை திருடிச் சென்றுள்ளனர்.

கல்வியங்காட்டில் கடந்த ஒரு மாதத்தில் இதுபோன்ற பத்துச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. இதேபோல இருபாலையில் ஆசிரியர் ஒருவரின் வீட்டினுள் புகுந்த திருடன் அங்கிருந்து சில பெறுமதியான பொருட்களை எடுத்துச் சென்றுள்ளான்.
ஆட்கள் இல்லாத வீடுகள்இ தனிமையில் பெண்கள் உள்ள வீடுகளை அறிந்து திருடர்கள் தமது கைவரிசையைக் காட்டி வருகின்றனர்.
கடந்த மாதம் தென்மராட்சிப் பகுதியில் பட்டப்பகலில் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவத்தில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக