ஆழும்தரப்பினால் சமர்பிக்கப்பட்டுள்ள அரசியல் யாப்பு திருத்தத்திற்கு பிரதான எதிர்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி பலத்த எதிர்ப்பை தெரிவித்துள்ளது. அரசியல் யாப்பின் திருத்தம் பிரதமரால் சபாநாயகரிடம் சமர்பிக்கப்பட்டபின்னர் ஐக்கிய தேசியக் கட்சியினர் பாராளுமன்றின் பாரளுமன்றிலிருந்து வெளிநடப்பு செய்துள்ளதுடன் இவ்வரசியல் யாப்பு திருத்தம் தொடர்பான விவாதத்தில் தமது கட்சியினர் பங்குகொள்ளப்போவதில்லை என எதிர்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
விவாதத்திற்கு விடப்பட்டுள்ள உத்தேச அரசியல் யாப்பிற்கான அங்கீகாரம் வேண்டி நாளை பாராளுமன்றில் வாக்ககெடுப்பு இடம்பெறவுள்ளது. இவ்வாக்கெடுப்பிலும் ஐக்கிய தேசியக் கட்சி கலந்து கொள்ளாது என தெரிவித்துள்ளது. மேலும் தமது எதிர்ப்பினை தெரிவிக்குமுகமாக ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் உட்பட கட்சியின் அங்கத்தவர்கள் பலர் பாரளுமன்ற வளாகத்திற்கு முன்னபாக உண்ணாவிரதப் போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக