புதன், 22 செப்டம்பர், 2010

TNA வடக்கு மாகாண சபை தேர்தல

வடக்கு மாகாண சபை தேர்தல் தொடர்பில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பை அரசாங்கம் சந்திக்கும்.
வடக்கு மாகாண சபை தேர்தலை விரை வில் நடத்துவதற்கு அரசாங்கம் முன்னுரிமை வழங்கி செயற்படுகின்றது. அந்த வகையில் விரைவில் வடக்கு மாகாண சபை தேர்தல் தொடர்பில் தமிழ்த் தேசிய கூட்டமைப்புடன் பேச்சு நடத்த அரசாங்கம் எதிர்பார்க்கின்றது. அமெரிக்கா சென்றுள்ள ஜனாதிபதி நாடு திரும்பியதும் பெரும்பாலும் கூட்டமைப்புடனான  பேச்சு இடம்பெறும் என்று ஊடகத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்தார்.
கூட்டமைப்புடன் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அரசாங்கம் விரைவில் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளது என்றும் வடக்கு மாகாண சபை தேர்தலை விரைவில் நடத்த எதிர்பார்க்கின்றது எனவும் வெளிவரும் தகவல்கள் தொடர்பில் விபரிக் கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அமைச்சர் இவ்விடயம் குறித்து மேலும் கூறுகையில், வடக்கு மாகாண சபை தேர்தலை விரைவில் நடத்தவேண்டும் என்று அரசாங்கம் எதிர்பார்க்கின்றது. அது தொடர்பில் நாங் கள் கூடிய அவதானம் செலுத்தியுள்ளோம். வடக்கு மாகாணத்தில் ஜனநாயகத்தை உறுதிபடுத்தவும் அரசியல் நிறுவனங்களை செயற்படுத்தவும் வேண்டியது முக்கிய விடயமாகும். எனவே அதனடிப்படையில் வடக்கு மாகாண சபை தேர்தலுக்கு அரசாங்கம் முக்கியத்துவம் வழங்கியுள்ளது.
இந்நிலையில் எதிர்வரும் நவம்பர் மாதத்தில் வரவு செலவுத்திட்டம் சமர்ப்பிக்கப்படவுள்ள நிலையில் அதனையடுத்து விரைவாக வடக்கு மாகாண சபை தேர்தலை நடத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும்.
மேலும் அடுத்த வருடம் முதல் காலாண்டு பகுதிக்குள் கட்டாயம் உள்ளூராட்சிமன்ற தேர்தலை நடத்தவேண்டிய தேவை உள்ளது. எனவே அக்காலப்பகுதியில் வடக்கு மாகாண சபை தேர்தல் நடத்தப்படலாம். ஆனால் குறிப்பிட்ட காலப் பகுதியை குறிப்பிட்டுக் கூறமுடியாத நிலைமை காணப்படுகின்றது.
இதேவேளை வடக்கு மாகாண சபை தேர்தல், வடக்கு மாகாணத்தின் அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் மற்றும் இடம் பெயர்ந்த மக்களை மீள்குடியேற்றும் செயற்பாடுகள் என்பன தொடர்பில் தமி ழ்க் கூட்டமைப்புடன் விரிவாக கலந்துரையாட அரசாங்கம் எதிர்பார்க்கின்றது. ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபை  கூட்டத்தில் கலந்துகொள்ள சென்றுள்ள  ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நாடு திரும்பியதும் தமிழ் கூட்டமைப்புடனான பேச்சு வார்த்தை நடைபெறும் என்று கருதுகின்றோம். இது தொடர்பில் தமிழ்க் கூட்ட மைப்புக்கு அழைப்பு விடுக்கப்படும் என்றார்.
இதேவேளை, அரசாங்கம் வடக்கு கிழக் கில் மேற்கொள்ளும் அபிவிருத்தி வேலை த்திட்டங்கள் மற்றும் ஏனைய நலன்புரி செயற்பாடுகளுக்கு மட்டுப்படுத்தப்பட்ட ஆதரவு வழங்கப்படும் என்று அண்மையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்திருந்தது. அத்துடன் கூட்டமைப்பு  இவ்வாறு தெரிவித்துள்ளமையானது சிறந்த சமிக்ஞையாகவுள்ளது என்று அரசாங் கத்தின் அமைச்சர் ஒருவர் தெரிவித்திருந் தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக