நாடாளுமன்றில் கட்சி தாவும் செயற்பாடு விபச்சார தொழிலுக்கு நிகரானது: அப்பாத்துரை விநாயகமூர்த்தி நாடாளுமன்றில் கட்சித் தாவும் நடவடிக்கை விபச்சார தொழிலுக்கு நிகரானதென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் அப்பாத்துரை விநாயகமூர்த்தி தெரிவித்துள்ளார். 18 ஆவது திருத்தச் சட்ட மூலம் தொடர்பான விவாதத்தில் கலந்து கொண்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
கட்சியில் அங்கம் வகிக்க விரும்பவில்லை என்றால் கட்சியை விட்டு விலக வேண்டுமே தவிர, வேறு கட்சிக்கு தாவுவது முறையல்ல என அவர் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சி ஓர் முதுகெலும்பற்ற கட்சி என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தைரியம் இருந்திருந்தால் அரசியல் சாசனத் திருத்த சட்ட மூலத்திற்கு எதிராக இன்றைய தினம் வாக்களித்திருக்கலாம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக