யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் பொறியியல் பீடமொன்றை அமைக்கவும் விவசாய பீடத்தை விஸ்தரிக்கவும் இந்தியாவின் உதவியைப் பெறவுள்ளதாக உயர் கல்வி அமைச்சர் எஸ். பி. திசாநாயக்கா தெரிவித்துள்ளார்.
உத்தியோகபூர்வ விஜய மொன்றை மேற்கொண்டு இந்தியா சென்றுள்ள அமைச்சர் திஸாநாயக்க, இந்திய மனித வள அபிவிருத்தி அமைச்சர் கபில் சிபிலை நேற்று முன் தினம் (28) சந்தித்தார். அப்போதே மேற் குறித்த விடயம் தொடர்பாக அவர் இந்திய அமைச்சருடன் பேசினார்.
அத்துடன் பிரபல இந்திய பேராசிரியர்களையும் சிரேஷ்ட விரிவுரையாளர்களையும் அவர்களது விடுமுறை நாட்களில் இலங்கை பல்கலைக்கழகங்களில் விரிவுரை யாற்றும் வாய்ப்பு பற்றியும் அமைச்சர் திஸாநாயக்க ஆராய்ந்து வருகிறார்.
அத்துடன் இலங்கை விரிவுரையா ளர்களுக்கு இந்தியாவில் பயிற்சி வழங்கும் சாத்தியம் பற்றியும் இரு அமைச்சர்களும் பேசியுள்ளனர்.
உயர் கல்வி முறைமையை நவீன மயப்படுத்த இலங்கை அரசாங்கம் எடுத்துவரும் நடவடிக்கைகளை அமைச்சர் திஸாநாயக்க இந்திய அமைச்சரிடம் விளக்கினார்.
2012 முதல் இலங்கை அரசாங்கம் இலங்கை பல்கலைக்கழகங்களில் கல்வி பயில்வதற்கான 200 புலமைப் பரிசில்களை ஆசிய மாணவர்களுக்கு வழங்கவுள்ளதாகவும் இதில் 40 சதவீத வாய்ப்புகள் இந்திய மாணவ ர்களுக்கே வழங்கப்படும் என்றும் மாணவ பரிமாற்ற திட்டத்தை ஊக்குவிப்பதாக இது அமையும் என்றும் அவர் இந்திய அமைச் சரிடம் கூறினார்.
வடக்கு, கிழக்கில் உள்ள கல்வி வசதிகளை சீரமைக்க வேண்டியதன் அவசியம் பற்றி இந்திய அமைச் சரிடம் தெரிவித்த அமைச்சர் திஸா நாயக்க, இலங்கை வருமாறு இந்திய அமைச்சருக்கு அழைப்பும் விடுத்தார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக