ஞாயிறு, 26 செப்டம்பர், 2010

Colombo கடலுக்குள் புதிய நகரம் 450 ஏக்கரில் நிர்மாணம்

கடலுக்குள் புதிய நகரம் 450 ஏக்கரில் நிர்மாணம்

கொழும்பு துறைமுகத்திற்கு அருகில் கடலை நிரப்பி 450 ஏக்கரில் புதிய நகரமொன்றை நிர்மாணிக்கும் பணிகள் இந்த வருட இறுதிக்குள் ஆரம்பிக்க உள்ளதாக துறைமுக அதிகார சபைத் தலைவர் பிரியந்த விக்ரம தெரிவித்துள்ளார்.

கொழும்பு துறைமுகப் பகுதியில் 285 ஹெக்டயர் அளவு நிரப்பி விரிவுபடுத்தப்படுகிறது. இதனுடன் இணைந்ததாக கொழும்பு துறைமுகத்தில் இருந்து காலிமுகத்திடல் வரையான 450 ஏக்கர் பகுதி நிரப்பப்பட்டு புதிய நகரமொன்று உருவாக்கப்படும். கடலை நிரப்பி ஆரம்பக் கட்ட பணிகளை துறைமுக அதிகார சபை மேற்கொள்ளும்.

இதற்காக 350 மில்லியன் டொலர் செலவிடப்படவுள்ளது. திட்டமிட்ட முறையில் புதிய நகரம் நிர்மாணிக்கப்படும். இதன் மூலமாக கொழும்பு நகரின் நெரிசல் குறைவடையும். இது தவிர தெஹிவளையில் இருந்து கொள்ளுபிட்டிவரை கடலோரமாக நிர்மாணிக்கப்பட்டு வரும் பாதையை காலிமுகத்திடல் வரை நீடிக்குமாறு ஜனாதிபதி பணித்துள்ளார்.

இதன்படி காலி முகத்திடலில் இருந்து கொள்ளுபிட்டி வரையான கரையோரமும் நிரப்பப்படும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக