திங்கள், 13 செப்டம்பர், 2010

பேராதனை பல்கலைக்கழக தமிழ் மாணவர் குழுக்களிடையே மோதல் : பெற்றோர் கவலை!

கண்டி,பேராதனை பல்கலைக் கழகத்தில் தமிழ் மாணவர் குழுக்களிடையே தொடர்ச்சியாக இடம்பெற்றுவரும் மோதல் காரணமாக பெற்றோர்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர். பேராதனை பல்கலைக்கழகத்தின் முதலாம் ஆண்டு தமிழ் மாணவர்கள் கடந்த சில மாதங்களாக இரவுவேளைகளில் மர்ம நபர்களின் தாக்குதல்களுக்கு உள்ளாகி வருகின்றனர்.

இத்தகவலை பல்கலைக் கழகத்தின் பழைய மாணவர் ஒருவர் எமது இணையத்தளத்துக்கு உறுதிப்படுத்தினார்.தொடரும் தாக்குதல்கள் ஏனைய தமிழ் மாணவர்களால் மேற்கொள்ளப்படுவதாகப் பல்கலைக்கழக நிர்வாகத்திடம் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. பேராதனை பல்கலைக் கழகத்தில் மர்மத் தாக்குதல்கள் தொடர்வதால் இது தொடர்பில் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்துவதாக எமது செய்தியாளர் தெரிவிக்கிறார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக