திங்கள், 6 செப்டம்பர், 2010

பிச்சைக்காரர்களை சிறை பிடித்து, கவுன்சிலிங் கொடுத்து,விட்டுடுங்க சாமீ; பிழைப்பை பார்க்கணும்' ப்ளீஸ்

கோவை மாநகராட்சியால் சிறை பிடிக்கப்பட்ட பிச்சைக்காரர்களில் பலர், மாநகராட்சி அளிக்கும் மறுவாழ்வு முயற்சிகளை ஏற்றுக்கொள்ள மறுப்பு தெரிவித்து, இரவோடு இரவாக விடுதியை விட்டு "எஸ்கேப்' ஆயினர்.

கோவை நகரை மேம்படுத்தும் நோக்கில் மாநகராட்சி நிர்வாகம், நகரின் முக்கிய இடங்களில் சுற்றித்திரியும் பிச்சைக்காரர்களை சிறை பிடித்து, கவுன்சிலிங் கொடுத்து மறுவாழ்வு அளிக்க, நேற்று முன் தினம் போலீசாரோடு இணைந்து, மாநகராட்சி சுகாதார ஆய்வாளர்கள் பிச்சைக்காரர்களை சிறை பிடித்தனர். பிடிபட்ட 141 பிச்சைக்காரர்களும் ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி ஆதரவற்றோர் விடுதியில் சேர்க்கப்பட்டனர்.அனைவருக்கும் தேவையான காலை, மதிய உணவு, மாலை சிற்றுண்டி, இரவு உணவு வகைகள் தயார் செய்து கொடுத்தனர். பிச்சைக்காரர்கள் சுய தொழில் செய்வதற்கும், மாற்று இடங்களில் தொழில் செய்து பிழைக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டது.மனநல ஆலோசகர்கள் இருவரை அழைத்து வந்து, ஆண்கள் மற்றும் பெண்கள் என தனித்தனியாக பிரித்து, அவர்களுக்கு நேற்று முன்தினம் மாலை கவுன்சிலிங் வழங்கப்பட்டது.

இவர்கள் காலை எழுந்தவுடன் குளிப்பதற்கு சுடுதண்ணீர் பெற ஹீட்டர் வசதிகள் செய்யப்பட்டன. காலை டீ மற்றும் காபி, உணவு வகைகள் அனைத்தும் அளித்தனர். மாநகராட்சி அதிகாரிகளின் திட்டத்துக்கு ஒத்துப்போக பிச்சைக்காரர்களுக்கு மனசு வரவில்லை.அதனால், அதிகாரிகள் அறிவுரையை ஏற்றுக்கொள்ளாத பிச்சைக்காரர்கள், "எங்களால் இந்த விடுதியில் தங்க முடியாது. சுதந்திரமாக சுற்றி பிழைப்பை பார்க்கணும். எந்த முதலீடும், உழைப்பும் இல்லாமல் 300 ரூபாய் வரை சம்பாதிக்கிறோம்; எங்களை தொந்தரவு செய்யாதீர்கள் ப்ளீஸ் 'என கெஞ்சினர்.மனநல ஆலோசகர்கள் கூறும் அறிவுரையை பிச்சைக்காரர்களில் பலர் ஏற்றுக்கொள்ளவில்லை. மறுப்பு தெரிவித்ததோடு பலர், நேற்று முன் தினம் இரவோடு இரவாக விடுதியை விட்டு ஓடி விட்டனர். பிடிபட்ட 141 பேரில், நேற்று காலை 70 பேர் மட்டுமே இருந்தனர். அவர்களில் பலரும் வழக்கம் போல் பிச்சை எடுக்க புறப்பட்டுச் சென்று விட்டனர். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக