வியாழன், 16 செப்டம்பர், 2010

இந்திய மாணவர்களை விட நன்றாகப் படிக்க வேண்டும்: ஒபாமா

அமெரிக்க பள்ளி மாணவர்கள் இந்தியா மற்றும் சீனாவில் இருந்து வரும் போட்டியை சமாளிக்கக் படிப்பில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்று அதிபர் ஒபாமா தெரிவித்தார். அமெரிக்க அதிபர் ஒபாமா பென்சில்வேனியா மாநிலம் பிலடெல்பியாவில் உள்ள ஒரு பள்ளிக்கூட மாணவர்களைச் சந்தித்துப் பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது,

உலக நாடுகள் அனைத்தும் முன்பை விட தற்போது அமெரிக்காவுடன் அதிகமாக போட்டி போடுகின்றன. வளர்ந்து வரும் நாடுகளான இந்தியாவிலும், சீனாவிலும் உள்ள மாணவர்கள் படிப்பில் கெட்டிக்காரர்களாக இருக்கின்றனர்.

இந்த சவால்களை எதிர்கொள்ள அமெரிக்க மாணவர்களும் படிப்பில் அதிக கவனம் செலுத்த வேண்டும். அமெரிக்க பள்ளிக்கூடங்கள் தொடர்ந்து ஏராளமான தொழில் துறை அறிஞர்களை உருவாக்க வேண்டும். அப்பொழுது தான் உலக அரங்கில் அமெரிக்கா தலை நிமிர்ந்து நிற்க முடியும்.

பள்ளிகளில் எவ்வளவு தூரம் முன்னேறுகிறீர்களோ, அந்த அளவு வாழ்க்கையிலும் முன்னேறுவீர்கள். பள்ளியில் பெறும் வெற்றி மாணவர்களின் வாழ்க்கையில் பெறப்போகும் வெற்றியை மட்டும் தீர்மானிப்பதன்று. அது தான் அமெரிக்காவின் வெற்றியையும் தீர்மானிக்கும். எனவே, நீங்கள் முன்பை விட நன்றாகப் படித்து வெற்றி பெற வேண்டும் என்று அவர் கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக