புதன், 29 செப்டம்பர், 2010

ரம்லத்தை விட்டு பிரிந்தார் பிரபுதேவா?



  நயன்தாராவுடன் திருமண ஏற்பாடு நடப்பதால் வீட்டுக்கு வருவதை பிரபுதேவா நிறுத்தி விட்டார். மனைவி ரம்லத் அழைத்தும் வர மறுத்து விட்டார்.

அண்ணா நகரில் பிரபு தேவாவுக்கு சொந்தமாக வீடு உள்ளது. தரை தளத்தில் உள்ள வீடு பிரபுதேவா பெயரிலும் முதல் தள வீடு ரம்லத் பெயரிலும் உள்ளது. தரை தளம் வீட்டை வாடகைக்கு விட்டு விட்டு மாடியில்தான் மனைவி குழந்தைகளுடன் வசித்தார்.
முதல் குழந்தை உடல் நலம் இல்லாமல் இருந்த போது ராஜ அண்ணாமலைபுரத்தில் வாடகை வீட்டில் தங்கி இருந்தனர். அந்த குழந்தை இறந்த போது பிரபுதேவாவுக்கு ஆறுதல் சொல்ல அவ்வீட்டுக்கு நயன்தாரா வந்தார்.

அதன் பிறகு வாடகை வீட்டை காலி செய்து விட்டு அண்ணா நகரில் உள்ள சொந்த வீட்டுக்கு வந்தார்கள்.

வெளியூர் படப்பிடிப்புக்கு செல்லும்போது தினமும் போன் செய்து மனைவியிடம் பேசுவது உண்டு.

குழந்தைகளுடனும்  பேசுவார். படப்பிடிப்பு முடிந்ததும் உடனேயே வீட்டுக்கு புறப்பட்டு வந்து விடுவார்.

ஆனால் நயன் தாராவுடனான காதலுக்கு பிறகு தற்போது அவர் வீட்டுக்கு வந்து ஒரு மாதம் ஆகிறது. நயன் தாராவை திருமணம் செய்யப்போவதாக அறிவித்ததில் இருந்து வீட்டுக்கு போவதை நிறுத்தி விட்டார்.
ரம்லத் செல்போனில் தொடர்பு கொள்ள முயன்றும் முடியவில்லையாம். ரம்லத் நம்பரை பார்த்ததும் எடுக்க மறுக்கிறாராம். உறவினர்களை அவரிடம் தொடர்பு கொண்டு பேச வைத்து வீட்டுக்கு வருமாறு அழைத்துள்ளார். ஆனாலும் வரவில்லை.
 
நயன்தாராவை திருமணம் செய்யப் போவதாக அறிவித்ததற்கு  ரம்லத் இதுவரை அதிரடியாக எந்த முடிவும் எடுக்கவில்லை. இதை சாதகமாக எடுத்துக்கொண்ட பிரபுதேவா, ரம்லத்தை பார்ப்பதை,பேசுவதை தவிர்த்து விட்டார்.
இதனால் ரம்லத்தை அவர் முழுவதுமாக பிரிந்துவிட முடிவெடுத்துள்ளார் என்று கூறப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக